Saturday, 9 December 2017

naan+nee=naam...

நான்+நீ=நாம்!!!...


* நான் உந்தன் தண்ணீர்!!!...
எனக்கென்று தனியாய் 
நிறமில்லை!!!...
மணமில்லை !!!...
நீ விரும்பும் வடிவம் 
நான் எடுப்பேன்!!!...
உன் உயிர்தாகம் தீர்ப்பேன்!!!...
மழையாய் வருவேன்!!!...
 முழுதாய் நனைப்பேன்!!!...

*நான் உந்தன் நிலம்!!!...
உன் பார்வையின் 
நீளம்தான் என் எல்லை!!!...
வேறு யாரும் வசிக்க...
இங்கு இடம் இல்லை!!!...


*நான் உந்தன்  நெருப்பு!!!...
உன்னைச் சுற்றித்தான் 
எரிந்து கொண்டேயிருப்பேன்!!!...
எனை எரித்து மெழுகாய் 
உருகி ஒளி தருவேன்!!!...
நீ அணைத்தால் மட்டுமே 
கட்டுப்படுவேன்!!!...
எப்போதுமே நான் 
அணையாமல் உடனிருப்பேன்!!!...
உன்னை அணைத்தே 
உன்னோடு உயிர்விடுவேன்!!!...


*நான் உந்தன் காற்று !!!...
புயலாய் தாக்குவேன்!!!...
தென்றலாகவும் உன்னை 
தாலாட்டுவேன்!!!...
நீ சுவாசிக்க மட்டுமே 
நானிருப்பேன்!!!...
உன் மூச்சோடுதான் 
கலந்திருப்பேன்!!!...
நீ சுவாசிக்கவில்லையானால் 
உயிர்விடுவேன்!!!...

*நான் உந்தன் வானம்!!!...
நீ தொடும் தூரத்தில் 
நானிருப்பேன்!!!...
உன் சிறகின் 
எல்லையாய் நான் விரிவேன்!!!...
வானவில் மட்டுமல்ல!!!...
வாழ்வின் அத்தனை 
வண்ணங்களையும் தருவேன்!!!...

*நான் உன் கண்ணாடி!!!...
நீ அழும்போது கண்டிப்பாய் 
நான் சிரிக்கமாட்டேன்!!!
உனக்காக மட்டும்தான் விழுவேன்!!!...
எத்தனை துண்டுகளாய் 
வேண்டுமானாலும் 
நான் உடைவேன்!!!...


Monday, 2 October 2017

KATHAL...

காதல் !!!!

1

முன்பு உன்மீது
காதல் இருந்தது!!!...
யாரிடமும்
காமம் தோன்றவில்லை!!!...
இப்போது
உன்னிடத்திலும்
காமமில்லை!!!


2

அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தம் மட்டுமல்ல!
சிலநேரங்களில்
அன்பும்கூட விஷம் தான்!...
காதல்!!

3

முன்பு
தனியாய்
சிரிக்க வைத்து...
இப்போது
தனிமையில்
அழவைக்கிறது!!!...
காதல்!!!!...

4

மிருகத்தை
மனிதனாக்கி...
மனிதனின்
தெய்வத்தை
வெளிக்கொணர்கிறது!!!...
காதல்!!!...

5

உனக்கு
நடக்காதவரை...
காதல்...
வேடிக்கைதான்!!!...

6

உறவுகளிடம்
மட்டுமல்ல!!!...
நட்பிடமும்
பொய் பேசும்!!!...
காதல்!!!...

7

எல்லாம்
 பெற்றிருந்தாலும்...
எதையோ
ஒன்றை
இழந்ததாய்
உணர
வைப்பதுதான்
காதல்!!...

8


ஒரு உண்மைக்காக...
எல்லோரிடமும்
பொய்யாய்
போகும்...
காதல்!!!...

9


உன்னோடும்
சிரித்து ...
உனக்காக அழும்!!!...
காதல்!!!...


10

உடலால் 
மட்டுமல்ல!!!...
உள்ளத்தாலும் 
இன்னும் 
பெண்ணை 
வலிமையாய்...
உணரவைக்கும்!!!...
காதல்!!!...

11


என் திமிர்...
கோபம்...
அகம்பாவம்...
பிடிவாதம்...
மொத்தமும்விட்டு
கெஞ்சவைக்கிறது!
கொடுமையான... 

காதல்!...


12


நீ  வெறும்
வார்த்தை!!!...
ஆனால்
நான்...
வாழ்க்கை !!!...
இப்படிக்கு
காதல்!!!

13

நம்பிக்கையை
நீ
காப்பாற்றததால்...
இப்போது
செத்துவிட்டது...
காதல்!!!...

14

அம்மாவாக்குவது அல்ல!...
அம்மாவையும்விட
உன்னை
அன்பில் அதிகம்
அழவைப்பதுதான்
என் உண்மையான
காதல்!!...


15


புரிந்தவர்களுக்கு
மொழி தேவையில்லை!!!...
புரியாதவர்களுக்கு
எந்த மொழியிலும்
புரியப்போவதில்லை!!!...
காதல்!!!...


16


வாழ்க்கையில் 
உண்மைக்காதல்
ஒருமுறைதான்
கிடைக்கும்!!...
மறுமுறை
கிடைத்தால்
உண்மையில்லை
காதல்!!...

17


உன் உடல்தான்
என் தேவை என்றால்...
அதை
எப்படியும்
அடைந்திருப்பேன்!!!...
இப்படிக்கு
காதல்!!!...

18

காலங்காலமாய்...
காதலர்கள்
தோற்றுப்போக...
எப்போதுமே
கம்பீரமாய்
ஜெயிக்கிறது!!!...
காதல்!!!...

19

நம்பிக்கை தான்

 கடவுள் எனநினைத்திருந்தேன்!எனக்கு கடவுள் நம்பிக்கையையும்தந்தது...

 காதல்!!!..


20

காதல் 
என்பது 
சேர்வதுமில்லை!!!
பிரிவதுமில்லை!!!...
வாழ்வது!!!...வாழ்த்துவது!!!
வாழ்க...வளமுடன்.... 

















Wednesday, 21 June 2017

KANAVAA!!! EN KANAVAA!!!



காதல் கணவா !!!... என் கனவுக்  காதலா!!!
காலையில் நீ எழுகையில்... என் நெற்றியில் முத்தமிடு!!!...
காதில் செல்லமாய் கடித்துவிட்டு தினமும் என் காதோடு சொல்!!!...
நான் உன்னைக்  காதலிக்கிறேன்!!!...
என் ஒவ்வொரு விடியலும் உன் காதலோடு விடியட்டும்!!!...
இதுபோதும் எனக்கு!!!...
உனக்கு பின்னால்தான் நான் எழுவேன்!!!...
ஆனாலும்  நான் பத்தினிதான்!!!...
பல் துலக்காமல் முத்தம் வை!!!
 பால் கலந்து காபி கொடு!!!
சமையல் மந்திரம் எனக்குப் புதிது!!!...
நான் என்ன செய்தாலும் கொண்டாடு!!!...
உப்பில்லையென்றாலும் தப்பு சொல்லாதே!!!...
பிடிக்கவில்லையென்றாலும் பிடித்ததென சொல்!!!...
உன் அம்மாவின் சமையலைவிட
நான்தானென பெருமை சொல்!!!...
உன்னை அனுப்ப வாசல் வருவேன்!!!...
நீ வரும்போதெல்லாம் வாசலில் இருப்பேன்!!!...
ஆயிரம் கவலை!!!...கோபம் இருக்கலாம்!!!...
மொத்தமும் கொட்டு!!!...
உன் அன்பு மட்டுமல்ல!!!
உன் கோபமும் எனக்கு மட்டும்தான்!!!...
யார் வேண்டுமானாலும் உன்னைக் காயப்படுத்தட்டும்!!!...
மருந்தாய் நான் இருக்கிறேன்!!!...கவலைப்படாதே!!!...
கண்ணாளா!!!...இரவின் சண்டையை
விடியலில் நீட்டிக்காதே!!!...
பகல்பொழுதை யுகமாய் மாற்றாதே!!!...
பேசாமல் மட்டும் இருக்காதே!!!!,,,
அது...அடித்தால் வலிதரும்...
அத்தனை டன்னையும்விட வலியது!!!...
வேண்டாமென்று விளையாட்டுக்குக்கூட சொல்லாதே!!!...

செத்துபோவென்று மொத்தமாய் சொல்லிவிடு!!!...
உன் நண்பர்களோடு நீ இருக்கும் நேரத்தைக்கூட...
நீ எனக்கு தந்தால்  பிடிக்கும்!!!...

உன் நேரம்கூட எனக்கு மட்டும்தான்!!!...
உனக்கு உன் உலகில் நானும்...
எனக்கு நீ மட்டும்தான் என் உலகம்!!!...
என்னோடு நீ பேசாவிட்டாலும் பரவாயில்லை!!!...
நான் பேச... கேட்க காது கொடு!!!...
கலாபக் காதலா!!!
தோழிகளோடுகூட சுற்ற எனக்கு பிடிக்காது!!!...
உன்னோடு வர ஏங்குகிறேன்...
வீட்டில் நீ இருந்தால் நீதான் என் கண்ணாடி!!!...
உன்னோடு வருகையில் மட்டும் பார்ப்பேன் நான் ...கண்ணாடி!!!...
பொருத்தமாய் உடை எடுத்துக்  கொடு!!!...
நீ இனி எடுக்கப்போகும் உடைக்கும்...
புடவை கணக்கு கேட்காதே!!!...
சுடிதார்!!!...ஜீன்ஸ்!!!... மிடி!!...! டாப்ஸ்!!!...
அத்தனையும் எடுத்துக் கொடு!!!...
நான் அழகாய்...இளமையாய்...
உன்னால்தான் என்று உலகம் உணரட்டும்!!!...
நீ சொல்லாமல் என் அழகு முழுமை இல்லை...
ஆயிரம் உடைகள் நான் உடுத்தினாலும்...
இரவில் நான் உடுத்திக் கொள்ள விரும்பும்
என் ஒரே உடை  நீ மட்டும்தான்!!!...
ரகசிய சினேகிதா!!!
பொக்கிஷம் நான்!!!...தேடு!!!...
இரக்கமில்லாமல் கொள்ளையடி!!!...
கட்டிலிலும்  நீ அசைவமாகவே இரு...
உனக்கு எப்போது வேண்டுமோ ...
அப்போதெல்லாம் தொல்லை செய்!!!...
உன்னைப்போலொன்று...என்னைப்போலொன்று...
கருணைக்கு பரிசாய் தருவேன்!!!....
ஆண்  மகன் நான் பெற்றெடுத்தலும்...
எனக்குப் பிடித்த ஆண் உலகத்தில்
நீ மட்டும்தான்...
தாயானாலும்...எனக்கு தகப்பனும் நீதான்!!!...
பிரசவம்  முடித்து கண் விழித்து நான்
பார்க்க விரும்பிய என் முதல் குழந்தை நீதான்!!!...
எப்போதும் நீ முன்னால் ஓடுவாய்!!!...
துரத்த முயன்று தோற்றுப்போவேன் நான்...
என் காதல் உண்மை என்றால்
ஒருநாள் உனக்கு முன்னால்
நான் போய்விடுவேன்!!!...
இல்லையென்றாலும்...
உடன்கட்டை ஏறி உன்னோடு கலப்பேன்!!!...
காதல் கணவா!!! என் கனவுக்  காதலா!!!
இதுபோதும் எனக்கு...
என் எல்லா பிறவியும் உனக்கு!!!...



Sunday, 18 June 2017

appa...

தாயுமானவன்...


1


**அப்பாவின்
கோபத்தில்...
அன்பு 
புரியுமானால்...
அப்பாவை 
மிகப்பிடிக்கும்!!!... 


2


**தன் வயதில் 
தனக்கு 
ஆசைப்பட்டு...
கிடைக்காததை எல்லாம்...
தன் மக்களுக்கு...
கிடைக்க 
பாடுபடுவார்...
அப்பா!!!


3


**உணவகத்துக்கு
செல்லும்போதுகூட...
எல்லோரும்
விரும்பியதைச்
சாப்பிட...
தான்
இட்லி மட்டுமே
சாப்பிடுவார்!!!...
அப்பா!!!...


4



**துணிக்கடையில்...
எல்லோருக்கும்
பிடித்ததை
வாங்கிக்கொடுத்துவிட்டு...
கைக்குட்டை வாங்கி...
கண் துடைத்துக்கொள்வார்!!!...
அப்பா!!!...


5

**அப்பாவின் 
தோளில் சவாரி 
பழகிவிட்டு...
சொந்தக்காலில் 
நிற்கும்போது 
தெரிகிறது!!!..
அவருக்கு 
எவ்வளவு 
வலிக்குமென்று!!!... 

6

**அப்பாவுக்கு 
பிடித்த 
மகனாய் இருக்கும் 
அதிர்ஷ்டம்...
எல்லா 
மகன்களுக்கும் 
கிடைப்பதில்லை!!!... 


7


**தன்னை 
தன் 
மகன் புரிந்துகொள்ளாத 
போதுதான்...
அப்பாவுக்கு...
தன்னுடைய 
 அப்பாவை மிகவும் 
பிடித்துப்போகிறது !!!... 

8


**சிறந்ததை 
 மட்டுமே தர 
ஆசைப்படும் 
தகப்பனிடம் 
பிடித்ததைத்தர 
புரியவையுங்கள்!!!...

புண்படுத்தாதீர்கள்!!!...

9


**அப்பாவின் 
கண்டிப்பின் 
அன்பு...
அப்பாவாகும்போதுதான்...
புரிகிறது!!!...

10


**சிறுவயதில்
தான் ஏக்கமாய்...
பார்த்ததை எல்லாம்...
தன் மகன்...மகளுக்கு ...
பாசத்தோடு...
பெருமிதத்தோடு...
வாங்கித்தருவார்!!!...
அப்பா!!!...

11

பாசம் மட்டுமே
இருப்பதுபோல்...
நடிக்கத் தெரியாத...
கோபமாய் மட்டும்
நடிக்கத் தெரிந்தவர்தான்...
அப்பா!!!...

12

வாழ்க்கையெனும்
திரைப்படத்தில்...
முதல் பாதியில்
வில்லனாகவும்...
இரண்டாம்பாதியில்
கதாநாயகனாகவும்...
மகனால்
உணரப்படுபவர்தான்...
அப்பா!!!...

Friday, 19 May 2017

நிறமதிகாரம் ...


1

கருப்பு...
குறையல்ல!!!...
திராவிடம்!!!...
அடையாளம்!!!...
வெள்ளை...
நிறமல்ல!!!...
குறைபாடு!!!...

2

இங்கு...
கருப்பு முடிக்கு 
வெள்ளையடிக்காமல்...
வெள்ளையை
கறுப்பாக்குபவர்களே 
அதிகம்!!!...


3

விழிகள்...
மட்டுமல்ல!!!...
கண்ணுக்கும் 
கருப்பு மை தான் 
அழகு!!!...

4

தாயின் கருவறை!!!...
கோவில் கருவறை!!!
இரண்டுமே கருப்புதான்!!!...
புனிதமானவை!!!...
வணங்கத்தக்கவை!!!...


5

வெள்ளையாய்
இருப்பவன்கூட
பொய்ச்சொல்வான்!!!...
கருப்பாய் இருப்பவனுக்கு
எதிர்ப்புசக்தி அதிகம்!!!...
ஆயுள் அதிகம்!!!...


6

ஓவியனுக்கு மட்டுமல்ல!!!...
புகைப்படக்காரருக்கும்
பிடித்த நிறம் கருப்பு!!!...

7

கருப்பு எனக்கு
மிகவும் பிடிக்கும்!!!...
என்னை...
முதன்முதலாய்...
உண்மையாய்
நேசித்தபெண் கருப்பு!!!...

8

நிறத்தில் என்ன
இருக்கிறது!!!...
ரோஜா கருப்பாய்
இருந்தாலும்...
அதிலும் வாசம் வரும்!!!...


9

புகைப்படங்களில்கூட...
கருப்பு வெள்ளை...
மங்காதவை!!!
பொக்கிஷமானவை!!!

10

பழுப்பு நிலக்கரி!!!...
கருப்புதான்!!!...
ஆனால்...
மின்சாரம்...
உலகத்தையே
வெளிச்சமாக்குகிறது!!!...

11

கணக்கு தராவிட்டால்...
சேமித்த பணம்கூட
கருப்பாகிவிடும்!!!...
உண்மைதான்
கருப்பு!!!...


12

காமராஜர்!!!...
லிங்கன்!!!..
மண்டேலா!!!...
நிறங்களைத்தாண்டி...
மனங்களை
வென்றவர்கள்!!!

13

கருப்பு
கரிக்குள் வைரமுண்டு!!!...
யானைக்குள்...
வெள்ளை தந்தமுண்டு!!!...
இனிப்பைத் தரும் கரும்பு!!!
கருப்பு...
இனிப்பானது...
விலைமதிக்க முடியாதது!!!


14

கரும்பலகையில்
வெள்ளை கட்டியை
கொண்டு எழுதினால்தான்...
அறிவையே  தரமுடிகிறது!!!
இருட்டு நிரந்தரமில்லை...
விடியல் தூரமில்லை!!!...

15

சிலப்பதிகார
கண்ணகிகூட
கருப்புதான்!!!...
அவள் கற்புநெறி...
மதுரையே எரித்தது!!!...


16

கருப்பும்!!!...
வெள்ளையும்!!!...
இணைந்தால்தான்...
கண்ணுக்கு
காட்சியே...
கிடைக்கிறது!!!...

17

கருப்பு...
துக்கத்தின் அடையாளமல்ல!!!...
உள்ளத்து
உணர்ச்சிகளின்
வெளிப்பாடு!!!..
வெள்ளை..
சமாதானமல்ல!!!...
சிலநேரம்
அமங்கலத்தின்
அறிகுறி!!!...


18

கல்லில்
வடித்த கடவுள்!!!...
கன்னியர் தேடும்
கண்ணன்...
கருப்புதான்!!!...
வெறுக்க முடியுமா?!!!...

19

வெறுப்பைக் காட்டாத...
நெருப்பான...
பொறுப்பான...
பெண்ணே...
கருப்பாய்
இருந்தாலும்
விரும்பப்படுகிறாள்!!!...


20

அத்தனை
நிறங்களையும்
காட்டும்
வானவில்லே...
சொல்கிறது!!!...
நிறம்...
நிரந்தரமில்லையென்று!!!...

21

நிறம்...
மங்கிப்போகும்!!!...
நாளடைவில் 
மறைந்தும் போகும்!!!...
மனதிற்கும்...

மகிழ்ச்சிக்கும்...

நிறமில்லை!!!








Tuesday, 2 May 2017

ROUTHIRAM PAZHAGU...




ரௌத்திரம் பழகு!!!...

1

கோபம்
இருக்கும் இடத்தில்...
குணம் இருக்குமா?...
தெரியவில்லை!!!...
ஆனால் கோபம்
 மிக மோசமான
குணம்!!!...

2

என்னுடைய
கோபத்தினால்...
வாழ்க்கையில்
நான்
இழந்த
பொறுமை நீ!!!...

3

என் கோபத்தினால்
நீதான்
அதிகம்
அழுதிருக்கிறாய்!!!...
ஆனால்
என் அன்பில்
அதையும்
தாண்டி
அழுதிருக்கிறாய்!!!...

4

குழந்தையின்
குறும்பில்
கோபப்படாதவனே!!!...
உண்மையில்
பொறுமைசாலி!!!...

5

கிடைக்காத...
நிராகரிக்கப்பட்ட...
அன்பின் வலி!!!...
இயலாமைதான்...
கோபம்!!!...

6

நமக்கு
மிகப்பிடித்தவர்களிடம்....
காட்டும்
அதிகபட்ச  அன்பின்
உரிமை...
கோபம்!!!...

7

உனக்கு
கோபமே
வரவில்லையென்றால்...
ஏதோ...
குறையிருக்கிறது!!!...
கோபமில்லா
மனிதன்...
அரை மனிதன்!!!...

8

தன் தவறை
மறைக்க...
எதிராளி மீது
நாம்
உபயோகிக்கும்
ஆயுதம்...
கோபம்!!!...

9

அதிக சந்தோஷத்தில்
மட்டுமல்ல!!!...
அதிக கோபத்தில்கூட...
தவறான முடிவுகள்தான்...
கிடைக்கின்றன!!!...

10

சிலவேளைகளில்
கோபம்
 தவிர்க்க முடியாதவை!!!...
தவிர்த்திருக்கலாமோ?...
பின்னால்
நினைப்பைத்  தருபவை!!!...

11


காதலியிடம்
வராத கோபம்....
காதலி
மனைவியானபின்
அடிக்கடி வருகிறது!!!...

12

என்னை என்
கோபத்தோடு
ஏற்றுக்கொண்ட
அனைவருமே
என் உறவுகள்!!!...
உணர்வுகள்!!!...

13

கோபப்பட்டு
சாதிக்கும்
மனைவியைவிட...
அழும் மனைவி...
சத்தமின்றி
சாதிக்கிறாள்!!!...

14

உணவில்
உப்பையும்...
உறவில்
கோபத்தையும்...
அளவோடு வைத்தால்
வளமாக வாழலாம்!!!...

15

புரிந்து
கொள்ளப்படும்
அன்பைவிட...
உணர்ந்து
கொள்ளப்படும்
கோபம்...
மிகவும்
 வலிமையானது!!!...

16

நான் மிகுந்த 
கோபக்காரன்!!!...
சொல்ல
வெட்கமாயிருக்கிறது!!!!...

17

கோபத்தில்
சொல்லும் வார்த்தைக்கு
எந்த மதிப்பும் இல்லை!!!...
சந்தோஷத்தில்
சொல்லாத வார்த்தைக்கு
எதைக் கொடுத்தாலும்
ஈடாகாது!!!...

18


கோபத்தின்
வார்த்தையைவிட....
அதுதரும்
வலிக்கு
ஆயுள்  அதிகம்!!!...



Saturday, 22 April 2017

AMMA...

அம்மா!!!...
1

**எத்தனை 
ஜென்மம் 
எடுத்தாலும் 
உன் அன்பின் 
அசலை 
அடைக்கவே 
முடியாது....
அம்மா!!!... 

2

**ஆயிரம்  
செல்வங்கள்
 சேர்த்தாலும்  
ஒழுக்கம் 
 எனக்கு நீ 
தந்த  
பெருஞ்செல்வம்  
அம்மா!!!... 

3
**எத்தனை 
சாமிகள் 
இருந்தாலும்...
அத்தனையிலும் 
குலசாமியாய் 
நீயே 
தெரிகிறாய்!!!...
அம்மா!!!...



4
**நீ இல்லாத 
போதுதான் 
உன் அருமை 
தெரிகிறது 
அம்மா!!!...

5

**எத்தனை 
பிறவி 
எடுத்தாலும் 
அத்தனையிலும் 
நீ 
வேண்டும் 
அம்மா!!!...


6

**பட்டினத்தார் 
மட்டுமல்ல...
காமராசரும் 
துறக்க 
முடியாத 
துறவு 
அம்மா!!!...

7
**உன் 
பொறுமை!!!...
சகிப்புத்தன்மை!!!...
குடும்பம் 
சிதையாமல் 
இருக்கிறது 
அம்மா!!!...


8

**இன்னுமொன்று...
விலைகொடுத்து
நான் 
வாழ்க்கையில் 
வாங்கமுடியாதது!!!...
உன் அன்பு
 மட்டும்தான்...
அம்மா!!...

9
**காதல் .மட்டுமல்ல..
கவிஞனின் 
தீராத 
கருப்பொருள் 
அம்மா!!!...

10

**மகனை 
மட்டுமல்ல....
அப்பாவின் 
துரோகத்தையும் 
மன்னிக்கும் 
மனது!!!...
அம்மா!!!

11

**மிச்சம் 
வைக்காமல் 
சாப்பிட 
சொல்லிவிட்டு...
மிச்சத்தை 
மட்டுமே 
சாப்பிடுவாள்!!!...
அம்மா!!!... 

12


**நரகத்தில் 
தவிக்கவிட்டு....
சொர்கம் 
போய்விட்டாய் !!!
அம்மா!!!

13

**வருடங்கள் 
போனாலும்...
என் 
மூச்சுக்காற்றில் 
உன் 
சுவாசம் 
மிச்சமிருக்கிறது!!!...
அம்மா!!!

14

**அடுத்த 
பிறவியிலாவது 
உன்னை 
கருவாய் 
சுமக்கவேண்டும்!!!
அம்மா!!!

15

 **கைரேகை 
மட்டுமல்ல!!!...
கால்ரேகையும் 
தேய்ந்து...
என்னை 
கையெழுத்திட 
வைத்தாய்!!!
அம்மா!!!

16

**எத்தனை 
தோசை 
வேண்டும்?
கேட்பாள் 
மனைவி!!!...
சின்ன தோசைதான்...
இன்னொன்று 
சாப்பிடு!!!...
கேட்காமலேயே 
வைப்பாள்!!!
அம்மா!!!...

17



**உயிர்...
மெய்...
உயிர்மெய்...
அம்மா!!!...
நீ 
இல்லாமல் நான் 
உயிர் இல்லா 
மெய்தான்...
அம்மா!!!...

18

**நிசமாய்
இருந்த நீ...
நினைவாய் 
மாறிப்போனாய் !!!...
இன்று...
அம்மா... 


Monday, 17 April 2017

KANAVU KANUNGAL...

1

சிரிப்பு...
அழுகைபோல...
கனவும்
மனிதனுக்கானது!!!...
கனவு காணுங்கள்!!!...

கனவு மட்டுமே காணாதீர்கள்!!!...

2

பலிக்கும் எனும் 
நம்பிக்கை இருந்தால்...
அதிகாலை கனவல்ல!!!...
பகல் கனவும் பலிக்கும்!!!...
கனவு காணுங்கள்!!!


3


உன் லட்சியம்
உன்னை தூங்கவிடாமல்
வைத்திருந்தால்...
அதுதான் கனவு!!!...
கனவு காணுங்கள்!!!...

4

நீ காணும்
கனவை விட...
யாரோ ஒருவருக்கு
நீ கனவாய்
இருந்தால்
நீ அதிர்ஷ்டசாலி!!!...

5


அந்தந்த வயதில்...
நீ காணும் கனவு...
அந்தந்த வயதில்
நிஜமானால்...
நீ அதிர்ஷ்டசாலி!!!......

6

கனவுகள் தாண்டி...
கிடைக்கும் வாழ்க்கை
மிகப்  பெரிய போதை...
கடந்து போனவர்களைவிட
அழிந்துபோனவர்களே அதிகம்!!!...

7


காதலியைப் பற்றிய
கனவைவிட...
மனைவிக்கான
கனவு நிஜமானால்...
ஆணுக்கு
வாழ்க்கை  சொர்கம்!!!...

8


நீ என் கனவு!!!...
பலிக்கவேண்டும்!!!...
இல்லையென்றாலும்...
இனி
உன் கனவுதான்
என் கனவு!!!...

9


கண் தானம்
செய்யும்போது...
பார்வையை மட்டுமல்ல!!!...
கனவு காணும்
உரிமையையும்
தருகிறோம்!!!...
கண் தானம் செய்வோம்!!!...

10

கனவு என்பது உரிமை!!!...
ஒவ்வொவருவருக்கும்
வேறு... வேறு... கனவு உண்டு!!!...
உங்கள் கனவை
மற்றொருவர் மீது
திணிக்காதீர்கள்!!!...

11


சிலருக்கு
மட்டுமே
கனவு நனவாகிறது!!!...
பலருக்கு
கனவு
கனவாகவே போகிறது!!!...

12


நிறைவேறாத 
கனவின்வலியைவிட...
பாதி மட்டுமே...
பலிக்கும்
கனவின் வலி...
கொடுமையானது!!!...

13


கருப்பு... வெள்ளை...
வாழ்க்கையில்
இன்னும்
வண்ணமாய்
மிச்சமிருப்பவை
கனவுகள் மட்டுமே!!!..

14.


நிரந்தரமில்லை...
என்றாலும்!!!...
வானவில்லையும்
தாண்டிய...
வண்ணங்களைத்
தருகிறது...
கனவுகள்!!!...

15


தனக்கான
கனவு வாழ்க்கையை
வாழவேண்டும்...
நினைக்கும்போது
பலருக்கு
வாழ்க்கையே
கனவாய்
முடிந்துவிடுகிறது!!!...

16


கிடைக்கவில்லை...
என்றாலும்...
சில கனவுகள்...
சுகமானவை!!!...

17


கனவிலும் நினைக்காத...
காதல்!!!...
துரோகமாகும்போது...
நிஜம்
கனவை விட
கொடுமையானது!!!...

18


கனவுக்கவிதையை...
இரவில்வடித்து...
காலையில்...
காணாமல் தேடும்...
கவிஞனின்  வலி
சுகமானது!!!...

19


எத்தனையோ பேர்...
முதல்வர்
கனவில் இருந்தாலும்...
காமராஜரைத்தவிர...
யாரையும்...
முதல்வராக
ஏற்றுக்கொள்ளவில்லை...
கனவு!!!...

20



கனவும்...காதலும்...
ஒன்றுதான்!!!...
சிலருக்கு
கனவு
காதலாய் கைகூடுகிறது!!!...
பலருக்கு
காதலே
கனவாய் போய்விடுகிறது!!!...


Saturday, 14 January 2017

DEVATHAI MAGALUKU...


மகளெனும் தேவதைக்கு!

1


மகனை கருவாய் 
சுமக்கும் அம்மா அழகுதான்!!!...
ஆனால் 
மகளை கருவாய் சுமக்கும்போதுதான்...
அம்மா  உலக அழகு!!!...

முதல் குழந்தை 
மகளாய்தான் இருக்குமென்று...
பெயரோடு ஆசையாய்...
 காத்திருக்கிறார்!!!அப்பா!!!


2


அப்பாவானது
மகிழ்ச்சி தான்!
ஆனால்
முதன்முதலாய் 
மகள் அழைத்தபோது
மிக்க மகிழ்ச்சி!


3

எனக்கு
மகள்
இருக்கிறாள்!
நான் மலடன்
இல்லை...
4

முதன் முதலாய்பேசத்தொடங்கும்
மகளின்புரியாத மொழி
அம்மாவுக்குமட்டுமேபுரிகிறது!

5

எப்படிப்பட்ட
அப்பாவையும்
மகள்பிறந்து
திருத்துகிறாள்!

6

சாப்பிடாமலே
அடம் பிடிக்கும்
மகள்
தன்
பொம்மைக்
குழந்தையை
அழகாய்
சாப்பிட
வைக்கிறாள்!

7

நான் நாளைக்கு
ஊருக்குப் போய்
நேற்று வந்தேன்!
மகளின்
இலக்கணப்பொய்யில்
அழகாகிறது
இன்னும் மொழி!

8

மகள்வளரும்போதே
அப்பாவுக்கு
பொறுமையும்...
பொறுப்பும்...வளர்கிறது!

9

மகளுடன்
கண்ணாமூச்சி
விளையாட்டில்
கண்டுபிடிக்கவும்
தோன்றவில்லை!
காட்டிக்கொடுக்கவும்
மனமில்லை!


10

கோபித்துக் கொண்டு
மகள்  அமர்ந்திருக்கும்
அழகைப் பார்க்கையில்
சமாதானப்படுத்த
தோன்றுவதேயில்லை!...

11

 மகளின்
கோபத்தைத்
தீர்க்க
சிறு புன்னகையும்
சாக்லேட்டுமே ...
போதுமானதாய்
இருக்கின்றன!

12

வீட்டில்பொருட்களை
மகள்கலைத்து
விளையாடுகையில்
இன்னும்அழகாகிறது  வீடு!

13

வீட்டுச் சுவரில்
மகளின்கிறுக்கல்தான்!
 மாடர்ன் ஆர்ட்...
பொருள்புரியாவிட்டாலும்
அதற்க்குவிலை ஏதுமில்லை!!!...

14

தூங்கும்
மகளை
எழுப்புவதுதான்
மிகப்பெரிய
பாவமாய்
தோன்றுகிறது!

15

அத்தனைஅடம்
 செய்துவிட்டு
அமைதியாய்...
அழகாய்...
தூங்கும் மகள்தான்!
உலகத்தின்எட்டாவது அதிசயம்!...

16

எத்தனை செலவு
செய்து
வீடு கட்டினாலும்...
மகள் இருக்கும்
வீடுதான்
முழுமை
பெறுகிறது!

17

பிரம்பை வைத்து
மகள் மிரட்டி
பாடம் நடத்துகையில்
மாணவனாகவே
மாறிப்போகுதுமனசு!


18

திடீரென்று
சேலை
அணிந்து
மகள்
வருவதை
பார்க்கையில்
மகிழ்ச்சியை
தாண்டி
பயமும்
வருகிறது!

19

அப்பாவைப்போல்தான் 
கணவன் வேண்டுமென்று 
கேட்கும் மகள்தான் 
வரம்!

மகளின் திருமணத்தில் 
அப்பாவின் கண்ணீர்...
அம்மாவின் அத்தனை 
ண்ணீரையும்விட வலிமையானது!!!...


 20

புகுந்த வீட்டுக்கு 
மகள்போன  பின் 
வீட்டில்கூட 
உயிர் 
இருப்பதில்லை!



21

மகள்
கிடைக்கப்
பெறாத
அப்பாவும்
முன் ஜென்ம 
சாபம்தான்!

22

எனக்கென்ன!
என்னைப்
பார்த்துக் கொள்ள 
மகள் இருக்கிறாள்!
மகள் வளர்ந்து
அப்பாவை 
மாற்றுகிறாள்!

23


மகள்களுள் 
ஒப்பீடு 
தேவையில்லை!
எல்லா மகள்களுமே 
தேவதைகள் தான்! 

24

மகள் இருக்கும் 
வீடு....
வீடு இல்லை!
அது வீடுபேறு!

25

மகளின் மகளை 
கொஞ்சும் 
வரம் 
சில அப்பாக்களுக்கு 
மட்டுமே 
கிடைக்கிறது!


26


மகளைப் பெற்ற 
அப்பாவுக்கு 
மட்டுமே தெரியும்!
அடங்கிப்போவதுதான்...

அன்பென்று!!!...



27


தம்பி...தங்கைக்கு... 
மட்டுமல்ல!
மகள் இருக்கும்
வீட்டில்
அப்பாவுக்கு 
கிடைப்பது
 இன்னொரு அம்மா!!!... 



NANBAN...

நண்பன்... 1 *முகத்துக்கு முன்னால் திட்டியும்!!!... முதுகுக்குப் பின்னால் தட்டியும் மட்டுமே கொடுப்பான்!!! நண்பன்!!!... 2 ...