கரு முதல் கல்லறை வரை...
*கருவாய் இருக்கும்போதே காட்டிக்கொடுக்கப்பட்டால்
நீ கலைக்கப்படலாம்...
*தவறிப் பிறந்தாலும் தாய்ப்பாலாய் உனக்கு
கள்ளிப்பால் கொடுக்கப்படலாம்...
*உயிரை பறிக்க உணவாய் உனக்கு
நெல்மணி தரப்படலாம்...
*உறவை முடித்து வைக்க சிலநேரம் நீ
உயிரோடும் புதைக்கப்படலாம்...
*அரசுத்திட்டம் போலவே அரசுத்தொட்டிலிலும்
அவசரமாய் நீ அடக்கம் செய்யப்படலாம்...
நெல்மணி தரப்படலாம்...
*உறவை முடித்து வைக்க சிலநேரம் நீ
உயிரோடும் புதைக்கப்படலாம்...
*அரசுத்திட்டம் போலவே அரசுத்தொட்டிலிலும்
அவசரமாய் நீ அடக்கம் செய்யப்படலாம்...
*நீ பிறந்த நேரத்தில் சில நோயாளிப்பெருசுகள்
இறந்தாலும் இராசி இல்லாதவள்
அதிர்ஷ்டம் கெட்டவள் என அடுக்கடுக்காய்
உனக்கு பெயர்கள் சூட்டப்படலாம்...
*உலகமென்பது உனக்கு உன் வீட்டு சமயலறையாய்
மட்டுமே மாற்றப்படலாம்...
*பள்ளிப்படிப்பும் கூட உன் வீட்டுப்படியோடு
முடிக்கப்படலாம்...
*அடிமையாய் நடக்கப்பழகுமாறு உனக்கு
அடிப்படைக்கல்வி கற்றுத்தரப்படலாம்...
*அடங்கிநடப்பதே அன்பென்று உனக்கு
அறிவுறுத்தப்படலாம்...
*நீ பேசுவதும் சிரிப்பதும் கூட
குற்றமென்று உனக்கு சட்டமாக்கப்படலாம்...
*மாப்பிள்ளை பார்க்கும் நாடகமும் அவசரமாய்
உனக்கு அரங்கேற்றம் செய்யப்படலாம்...
*உன் மௌனத்தைக்கூட சம்மதமென நினைத்து
கட்டாய கணவன் உனக்கு கல்யாணத்தில் வரலாம்...
*கோவலக் கணவனுக்கும் கண்ணகியாய் நடக்க நீ
தண்டிக்கப்படலாம்...
*உன் உரிமைக்காக நீ எதிர்க்கும் போது
மண்ணெண்ணெய் சிலநேரம் உன்னையும் எரிக்கலாம்...
*சட்டங்கள் உன் விஷயத்தில் மட்டும் ஏனோ
சத்தியம் மீறலாம்...
*உன் கொலை என்பது பல நேரம்
தற்கொலையாய் நிறம் மாறலாம்...
*காவல் நிலையங்களில்கூட
உன் கற்பு களவாடப்படலாம்...
*இழந்த கற்புக்கும் விலையாய் நீ விலைமாதாய்
விளம்பரம் செய்யப்படலாம்...
*ஆகையால் இனிமேலாவது யாரும்
மங்கையராய்ப் பிறப்பதற்காக மறந்தேனும்
மாதவம் செய்ய வேண்டாம்...
மிகவும் அருமை. முற்றிலும் உண்மை. பெண்ணின் நிலையோ கொடுமை.
ReplyDelete