Monday, 8 July 2013

King Kamarajar - KK sila kurippugal..

K.K சில குறிப்புகள் 


* நீ  பிறந்த போது 
   வானில் ஏதும்  நட்சத்திரம் புதிதாய் தோன்றவில்லை...
   ஆனால் எங்களை ரட்சிக்க வந்த தேவதூதன் நீதான்...

*நீ உதித்த நாளில் வானில் 
  பிறை ஏதும் தெரியவில்லை...
  ஆனால் அன்றுதான் எங்களுக்கு புனித ரமலான்...

*உன் ஜனனத்தில் பூமியில் 
  எந்த பிரளயமும் இல்லை...
   ஆனாலும்  நீ ஒரு அவதாரம்தான்...

*உனக்கு முன்னும் பின்னும் நிறையபேர்...
  ஆனால்  நீதான்  தமிழகத்தின் முதல் எண்...
  முதல்வர்களில் முதல்வன்...

*கருப்பு தங்கம் நிலக்கரியா! பெட்ரோலியமா!...
  உன்னை தெரியும் வரையில்தான்
 எனக்கு  குழப்பம் இருந்தது...

   *நீ சொக்க தங்கமும் அல்லவா!
  அதனால்தான் உன்னை யாராலும் 
  நீட்டவும் முடியவில்லை...
  மடக்கவும் முடியவில்லை...

*இங்கு கருப்பு எம்.ஜி.ஆர் கூட உண்டு...
  ஆனால்  சிவப்பு காமராசர் என்று  யாருமில்லை...

*தமிழகத்தை ஆண்ட ஒரே பச்சை தமிழன் நீதான்...

*இந்தியாவின் தேசத்தந்தை காந்தி என்றால் 
  எங்கள் தமிழகத்தின் தாயுமானவன் நீதான்...

*கடைசி வரையில் நீ எந்த 
  சொத்துமே சேர்க்கவில்லை...
  ஆனால்  நீதான் தமிழகத்தின் 
  விலை மதிப்பில்லாத  சொத்து...

*உனக்கும் பிற அரசியல்வாதிகளுக்கும் 
 ஒரே ஒரு வித்தியாசம்தான்...
  இவர்கள் செய்ததை நீ செய்யவில்லை...
  நீ செய்த எதையுமே இவர்கள் 
  இன்றுவரையில் செய்யவில்லை...

*ஸ்விஸ்  நாடு உனக்கு தெரியாது...
ஆனால் திருச்சிக்கு  அருகில் உள்ள திருவெறும்பூர் 
நீதான் அடையாளம் காட்டினாய்...

*திருவோடு கூட இல்லாத ஆண்டியாய்தான் 
கடைசிவரையில் நீ இருந்தாய்...
சொந்த நாட்டில்கூட உனக்கு 
வங்கி கணக்கு இருந்ததில்லை...

*சிவகாமியின் செல்வந்தான் நீ...
அந்த சிவகாமியிடமும் நீ 
நாட்டு தலைவனாகத்தான் நடந்தாய்...
தாய்க்குகூட உன்னிடம் சலுகை இல்லை...

*பதவிக்காக கட்சிகள் தாவும் கிங்காங் 
தலைவர்களுக்கு இடையில் நீதான் 
கிங்மேக்கர் ஆக  இருந்தாய்...  

*இந்தியாவே உனக்கு இருமுறை கிடைத்தபோதும் 
தமிழகத்தை தான்  நீ தத்தெடுத்து கொண்டாய்...

*கட்சியை காப்பாற்ற நீ பதவியை விட்டாய்...
உனக்கு மட்டும் வேட்டியும் துண்டும் ஒன்றுதான்...

*எப்போதும் நீ தோற்றதில்லை...
ஒரே ஒரு முறை மட்டும் உன்னால் தமிழ் ஜெயித்தது...

*உன் காலத்தில் நான் இல்லை...
உன்னை நான் பார்த்ததுமில்லை...
ஆனால் பார்க்காமலே எனக்கு 
பிடித்துப்போன ஒரே பவர் ஸ்டார் நீதான்...

*ஏழையின் சிரிப்பில் இறைவனை 
  காண்போம் என்றார் அண்ணா!...
  ஆனால்  எளியவர்களின் கண்ணீரையும் 
  நீ மட்டுமே அறிந்தாய்...

*அசத்தும் உருவமில்லை...
   மயக்கும் பேச்சுமில்லை...
   நீ உடுத்திய விலை உயர்ந்த ஆடை 
   கதராடைதான்...
   நீ அதிகபட்சம் சாப்பிட்ட 
   அசைவமும்கூட முட்டைதான்...

*இந்தியாவின் பொற்காலம் 
  குப்தர்கள் காலமாம்...
   தமிழகத்தில் உன் ஆட்சிக்காலம்தான் 
  இன்றுவரையில் பொற்காலம்...

*நீ மட்டும் இல்லை என்றால் இன்றைக்கும்
 தமிழகம் பீகாராய் ஜார்கண்டாய் இருந்திருக்கும்...

*ஒன்பது ஆண்டுகள்தான் நீ 
  முதல்வராய் இருந்தாய்...
   ஆனால் இன்றைய தலைமுறைக்கும் 
   உன் ஆட்சிதான் கனவு...

*இன்றைக்கும் பேஸ்புக் டுவிட்டரில்
  அதிகம் பகிரப்பட்டவை நீ மட்டும்தான்...

*உனக்கென்று  தனியாய் குடும்பமில்லை... 
  ஆனால்  ஒவ்வொரு குடும்பத்தின் 
  பூஜை அறையிலும் நீ இருக்கிறாய்...

*நீ படிக்காத மேதையென்று  
மெத்த படித்த சிலபேர் சொல்கிறார்கள்...

*நீ மட்டும்தான் பள்ளிகூடங்கள் திறந்தாய்...

*அன்னசத்திரம் ஆயிரம் விடவும் 30000
 பள்ளிகூடங்கள்  உயர்ந்ததல்லவா!...

*ஏழைக்கு எழுத்தறிவித்தல் நீ அறியாததா!

*எம் அம்மையப்பன் துணியாத எங்கள் 
பசி தீர்க்க பிச்சை எடுக்கவும் துணிந்தாய்...

*மதிய உணவும் கொடுத்து மதிப்பில்லா 
கல்வியும் கொடுத்தாய்...

*உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் !
உனக்கா தெரியாது...

*உன்னை எதிர்த்தவர்கள் பலருக்கும் 
உன் அமைச்சரவையில் இடம் கொடுத்தாய்...

*இன்னா செய்தாரை குறளா  உனக்கு தெரியாது...

*பெரம்பூர் ஆலை நீலகிரி பிலிம் தொழிற்சாலை 
NLC  BHEL ஆவடி  டாங்கியென 
அத்தனைக்கும் நீதான் கரணம்...

*பாரதியின் கனவுக்கு நீதான் உயிர் கொடுத்தாய்...

*பரம்பிகுளம்-அழியார்  கீழ் பவானி சாத்தனூர் 
வைகை மணிமுத்தாறு கிருஷ்ணகிரி 
அணைகள் எல்லாம் உன்னால்தான் கிடைத்தது...

*சுழன்றும் ஏர் பின்னது உலகம் நீ தெரியாததா!...

*நீ படிக்காத மேதை இல்லை...
தமிழகத்தையே படிக்க வைத்த  மேதை...
உன் வாழ்க்கை  இன்று அனைவருக்கும் பாடம்...

*உயிரோடு இருக்கும் போதே உன் சிலையை 
பார்க்கும் பெருமை உனக்கு மட்டும்தான் கிடைத்தது...

*சத்தியமூர்த்திதான் உன் அரசியல் குரு...
அதனால் சத்திய சரித்திரம்  உன் வாழ்க்கை ...

*காந்தியின் கடைசி வாரிசும் நீதான்...
காந்தீயத்தின் இறுதி மிச்சமும் நீதான்...

*காந்தி தெரியாத இந்தியன் 
காமராஜர் அறியாத தமிழன் இருவருமே மனிதனில்லை...

*உன்னைபோலவே எனக்கும் ஓர் கடைசி ஆசை  உண்டு...
 காந்தி பிறந்த ஒரு நாளில்தான் நீ மறைந்தாய்...
அதைப்போலவே  நீ பிறந்த ஒரு நாளில்தான் 
நானும் இறக்கவே  விரும்புகிறேன்... 


----மெய்யானவன்---
  
   



  

26 comments:

  1. மிக மிக அருமை....

    ReplyDelete
  2. அவர் இருக்கும் காலத்தில் நான் பிறக்கவில்லையே....அருமையான தலைவர்

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Pacchai tamilan I like this

    ReplyDelete
  5. Arumaiyana pathivu. 100% True

    ReplyDelete
  6. Semaaa I love u kamarajar thatha I miss you tha tha 😭😭

    ReplyDelete
  7. A great poem on K Kamaraj a great son of mother India., Thank you very much.

    ReplyDelete
  8. Wow......the whole history of kamaraj in short and sweet lines

    ReplyDelete
  9. the king maker Dr. k. kamarajar he is a very good citizen and the chieinister

    ReplyDelete
  10. Good super and very helpful me very much thanks

    ReplyDelete
  11. பட்டம் வாங்காமல் உலகை
    பகுத்தறிந்த பட்டதாரி நீ..... The real king maker....

    Nice lines,Keep writing bro....

    evan,
    karuppu thamilan, veera....

    ReplyDelete
  12. Tnx bro, i got first prize by ur kavidhi

    ReplyDelete
  13. Awesome article, it was exceptionally helpful! I simply began in this and I'm becoming more acquainted with it better! Cheers, keep doing awesome 검증사이트

    ReplyDelete
  14. சிறந்த கருத்துக்கள் அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete

NANBAN...

நண்பன்... 1 *முகத்துக்கு முன்னால் திட்டியும்!!!... முதுகுக்குப் பின்னால் தட்டியும் மட்டுமே கொடுப்பான்!!! நண்பன்!!!... 2 ...