Wednesday, 21 June 2017

KANAVAA!!! EN KANAVAA!!!



காதல் கணவா !!!... என் கனவுக்  காதலா!!!
காலையில் நீ எழுகையில்... என் நெற்றியில் முத்தமிடு!!!...
காதில் செல்லமாய் கடித்துவிட்டு தினமும் என் காதோடு சொல்!!!...
நான் உன்னைக்  காதலிக்கிறேன்!!!...
என் ஒவ்வொரு விடியலும் உன் காதலோடு விடியட்டும்!!!...
இதுபோதும் எனக்கு!!!...
உனக்கு பின்னால்தான் நான் எழுவேன்!!!...
ஆனாலும்  நான் பத்தினிதான்!!!...
பல் துலக்காமல் முத்தம் வை!!!
 பால் கலந்து காபி கொடு!!!
சமையல் மந்திரம் எனக்குப் புதிது!!!...
நான் என்ன செய்தாலும் கொண்டாடு!!!...
உப்பில்லையென்றாலும் தப்பு சொல்லாதே!!!...
பிடிக்கவில்லையென்றாலும் பிடித்ததென சொல்!!!...
உன் அம்மாவின் சமையலைவிட
நான்தானென பெருமை சொல்!!!...
உன்னை அனுப்ப வாசல் வருவேன்!!!...
நீ வரும்போதெல்லாம் வாசலில் இருப்பேன்!!!...
ஆயிரம் கவலை!!!...கோபம் இருக்கலாம்!!!...
மொத்தமும் கொட்டு!!!...
உன் அன்பு மட்டுமல்ல!!!
உன் கோபமும் எனக்கு மட்டும்தான்!!!...
யார் வேண்டுமானாலும் உன்னைக் காயப்படுத்தட்டும்!!!...
மருந்தாய் நான் இருக்கிறேன்!!!...கவலைப்படாதே!!!...
கண்ணாளா!!!...இரவின் சண்டையை
விடியலில் நீட்டிக்காதே!!!...
பகல்பொழுதை யுகமாய் மாற்றாதே!!!...
பேசாமல் மட்டும் இருக்காதே!!!!,,,
அது...அடித்தால் வலிதரும்...
அத்தனை டன்னையும்விட வலியது!!!...
வேண்டாமென்று விளையாட்டுக்குக்கூட சொல்லாதே!!!...

செத்துபோவென்று மொத்தமாய் சொல்லிவிடு!!!...
உன் நண்பர்களோடு நீ இருக்கும் நேரத்தைக்கூட...
நீ எனக்கு தந்தால்  பிடிக்கும்!!!...

உன் நேரம்கூட எனக்கு மட்டும்தான்!!!...
உனக்கு உன் உலகில் நானும்...
எனக்கு நீ மட்டும்தான் என் உலகம்!!!...
என்னோடு நீ பேசாவிட்டாலும் பரவாயில்லை!!!...
நான் பேச... கேட்க காது கொடு!!!...
கலாபக் காதலா!!!
தோழிகளோடுகூட சுற்ற எனக்கு பிடிக்காது!!!...
உன்னோடு வர ஏங்குகிறேன்...
வீட்டில் நீ இருந்தால் நீதான் என் கண்ணாடி!!!...
உன்னோடு வருகையில் மட்டும் பார்ப்பேன் நான் ...கண்ணாடி!!!...
பொருத்தமாய் உடை எடுத்துக்  கொடு!!!...
நீ இனி எடுக்கப்போகும் உடைக்கும்...
புடவை கணக்கு கேட்காதே!!!...
சுடிதார்!!!...ஜீன்ஸ்!!!... மிடி!!...! டாப்ஸ்!!!...
அத்தனையும் எடுத்துக் கொடு!!!...
நான் அழகாய்...இளமையாய்...
உன்னால்தான் என்று உலகம் உணரட்டும்!!!...
நீ சொல்லாமல் என் அழகு முழுமை இல்லை...
ஆயிரம் உடைகள் நான் உடுத்தினாலும்...
இரவில் நான் உடுத்திக் கொள்ள விரும்பும்
என் ஒரே உடை  நீ மட்டும்தான்!!!...
ரகசிய சினேகிதா!!!
பொக்கிஷம் நான்!!!...தேடு!!!...
இரக்கமில்லாமல் கொள்ளையடி!!!...
கட்டிலிலும்  நீ அசைவமாகவே இரு...
உனக்கு எப்போது வேண்டுமோ ...
அப்போதெல்லாம் தொல்லை செய்!!!...
உன்னைப்போலொன்று...என்னைப்போலொன்று...
கருணைக்கு பரிசாய் தருவேன்!!!....
ஆண்  மகன் நான் பெற்றெடுத்தலும்...
எனக்குப் பிடித்த ஆண் உலகத்தில்
நீ மட்டும்தான்...
தாயானாலும்...எனக்கு தகப்பனும் நீதான்!!!...
பிரசவம்  முடித்து கண் விழித்து நான்
பார்க்க விரும்பிய என் முதல் குழந்தை நீதான்!!!...
எப்போதும் நீ முன்னால் ஓடுவாய்!!!...
துரத்த முயன்று தோற்றுப்போவேன் நான்...
என் காதல் உண்மை என்றால்
ஒருநாள் உனக்கு முன்னால்
நான் போய்விடுவேன்!!!...
இல்லையென்றாலும்...
உடன்கட்டை ஏறி உன்னோடு கலப்பேன்!!!...
காதல் கணவா!!! என் கனவுக்  காதலா!!!
இதுபோதும் எனக்கு...
என் எல்லா பிறவியும் உனக்கு!!!...



No comments:

Post a Comment

NANBAN...

நண்பன்... 1 *முகத்துக்கு முன்னால் திட்டியும்!!!... முதுகுக்குப் பின்னால் தட்டியும் மட்டுமே கொடுப்பான்!!! நண்பன்!!!... 2 ...