Friday, 29 July 2022

NANBAN...

நண்பன்...



1


*முகத்துக்கு
முன்னால்
திட்டியும்!!!...
முதுகுக்குப்
பின்னால்
தட்டியும்
மட்டுமே
கொடுப்பான்!!!
நண்பன்!!!...

2

*எனக்கு
இரண்டாம்
ரசிகன்!!!...
முதல்
விமர்சகன்!!!
நண்பன்!!!

3

*நண்பனில்
கெட்டவன்
மட்டுமல்ல!!...
சிறந்தவன்
என்றும்
யாருமில்லை!!!...

4

*காதலுக்கு
தூதாவான்!!!...
காதல் காயத்துக்கு ...
மருந்தாவான்!!!...
நண்பன்!!!...

5


*நண்பன்
எதிரியாவது
கொடுமை!!!...
துரோகியாவது...
மிகப்பெரும்
கொடுமை!!!...

6

*வாழ்க்கையில்
எல்லா அசையும்
சொத்தையும்
இழந்தாலும்!!!...
இழக்க விரும்பாத
அசையும் சொத்து!!!...
நண்பன்!!!...

7


**காதலியின்
காயத்துக்கு...
நண்பன்
மருந்தாவான்!!!...
நண்பனின்
காயத்துக்கு...
அவன் மட்டும்தான்
மருந்து!!!...

8

**திருக்குறளை
போல
 உலக பொதுமறை!!!...
திருப்புகழையும் விட
அதிகம்
மணப்பவன்
நண்பன்!!!...

9

*காதலில்கூட...
சாதி...மதம்...நிறமுண்டு!!!...
எல்லாம் கடந்த உறவு!!!
நட்பு!!!

10

*தான் தோற்றாலும்
தன்  நண்பனின்
வெற்றியில்
பெருமிதம்
கொள்ளும்!!!...
நட்பு!!!...

11

*அப்பா...அம்மா...
இல்லாவிட்டாலும்...
ஒரு
நல்ல நண்பன்
இருந்துவிட்டால்...
யாரும்...
அனாதையில்லை !!!

12

*கிழிக்க...
தொலைக்க...
மனமில்லாத...
எத்தனை முறை
படித்தாலும்...
சலிக்காத
புத்தகம்!!!...
நண்பன்!!!...

13

*காதலி இல்லாத
உலகத்தை
கற்பனை
செய்யலாம்!!..
ஆனால்...
நண்பன் இல்லா  உலகம்!!!...
கற்பனைகூட
செய்ய முடிவதில்லை!!!

14


*போனை எடுத்தவுடன்
ஹலோ!!!
சொல்லாமல்
சொல் !!
நண்பா!!!
ஆரம்பிப்பான்...
நண்பன்!!!...




15

*உண்மையான
ஆண் -பெண்...
நட்பு...
காதலைவிட
மேலானது!!!...
கற்பைவிட
புனிதமானது!!!...

16

*உயிர் கொடுப்பாள்
அம்மா!!!...
அந்த உயிரைக் காக்க
தன் உயிரையே...
தருவான்
நண்பன்!!!...

17


*காதலியைவிட
நிறைகளையும்....
மனைவியைவிட
குறைகளையும்...
அறிந்தவன்
நண்பன்!!!...

18

*நீ அழுதால்
சிரிக்காத ...
நீ உடைத்தாலும்...
அத்தனை
துண்டிலும்...
உன்னையே காட்டும்
கண்ணாடி...
நண்பன்!!!...

19

* தன்னை..
.எதிரியாய்...
நினைப்பவனையும்...
தூரத்து நண்பனாய்...
அழகு பாராட்டும்!!!
நட்பு!!!...

20

*நண்பனின்
நண்பன்...
நண்பனாவது.தான் ..
நட்பின் அதிசயம்!!!..

21

*தாய்...தந்தை...
ஆசிரியரையும்போல ...
உன்னுடைய
உயர்வில்
பொறாமைப்படமாட்டான்!!!...
நண்பன்!!!...

22

**மனசு சரியில்லை!!!
சொல்லும்போது...
பீர்...
ஊற்றிக்கொடுத்து...
சொல்லுடா!!!
கேட்கும்...
நண்பன்!!!...
வரம்!!!... 


*ஆத்தா வைத்த சோறு!!!
நண்பன் ஊற்றிய பீர்!!...
இரண்டுமே
மறக்க கூடாதவை!!!...


23

*பழகிய
காதலிக்காகத்தான்...
உயிர்தரும் காதல்!!!
ஆனால்...
பார்க்காத
நண்பனுக்காக
உயிர் தந்த
நட்பு
இலக்கியம் !!!...

24

*பிரிந்த காதலியை
பார்க்க விரும்பாதவன்கூட ...
பிரிந்த
நண்பனை
பார்க்க விரும்புவதே...
நட்பு !!!...

25

*சொல்லாத காதல்
மட்டுமல்ல!!!...
நண்பன் இல்லாத
வாழ்க்கையும்
நரகம்தான்!!!...

26

*உப்பில்லா
உணவும்...
நட்பில்லா
உறவும்...
குப்பைக்குத்தான்
போகும்!!!...


27


 *உறவுக்குள்
ஈகோ இருந்தாலும்!!!...
ஈகோ இல்லாத
ஒரே உறவு!!!
நட்பு!!!...

28

*நண்பனின் தங்கையை
மட்டுமல்ல!!!...
அவன்
காதலியையும்
தங்கையாகவே
பார்ப்பான்!!!...
நண்பன்!!!...

29

*மச்சான்...
பாசத்தோடு நண்பனை
அழைத்தாலும்...
நண்பனின்
தங்கையிடம்
கண்ணியம் காப்பதே!!!
நட்பு!!!...


30

சூட முடியாததுதான்!!!...
ஆனால்
வாடாத...
வாசம் குறையாத பூ!!!...
நட்பு!!!...








 நண்பர்கள்தின வாழ்த்துகள்...

NANBAN...

நண்பன்... 1 *முகத்துக்கு முன்னால் திட்டியும்!!!... முதுகுக்குப் பின்னால் தட்டியும் மட்டுமே கொடுப்பான்!!! நண்பன்!!!... 2 ...