Friday, 30 September 2011

meyyanavan kavithaigal

                                                சராசரி..
 .
            *என்னுள்
                   கோபம்
                       உண்டு...
              ஆனால்
                   பொறுமையை
                       இழந்தவனில்லை...

             *என்னுள்
                    கனவுகள் உண்டு...
                ஆனாலும் இன்றுவரையில் 
                     உறக்கம் தொலைத்ததில்லை...


             *என்னிடம் தேடல்கள் உண்டு...
                    அதை என்னில் ஆரம்பித்து நான் 
                          உன்னோடு முடித்துவிட்டேன்...

             *எனக்கு 
                    தோல்விகள் உண்டு...
                ஆனாலும் மனம்
                     நம்பிக்கையை இழந்ததில்லை...
             *என்னுள்
                   காதல் உண்டு...
               அதற்காக நான்
                    சுயநினைவை எல்லாம்
                    இழந்ததில்லை...


              *என்னுள்
                    ஏமாற்றங்கள் உண்டு...
                 ஆனாலும் இன்றுவரையில்
                     யாரையும் நான்
                     ஏமாற்றியதில்லை...


              *எனக்கும்
                    சபலங்கள் உண்டு...
                 ஆனாலும் என்
                    உணர்ச்சிகள்
                     எல்லை தாண்டியதில்லை...


               *அவ்வபோது நான்
                      தலைகுனிந்து
                        நடப்பதுண்டு...
                  இன்றுவரையில்
                      எங்கும் தலைகுனிந்து
                            நின்றதில்லை...


                *என்னுள்
                      மிருகம் உண்டு...
                   ஆயினும் என்
                        மனிதம் செத்துவிடவில்லை...

Tuesday, 27 September 2011

kathal... kathal... kathal...

* நீ அழகாக இருந்தாய்...
      இது இறந்தகாலம்...
    நீ அழகாக இருக்கிறாய்...
       இது நிகழ்காலம்...
    நீ அழகாகவே இருப்பாய்...
        இது எதிர்காலம்...
        என்ன புரியாவில்லையா?...  
     நீதான் அழகின் இலக்கணம்
        என்பதை வேறெப்படி சொல்லுவது...


 *சில நேரங்களில்
      நீ அழகாய்  இருக்கிறாய் ...
   சில நேரங்களில் நீ
       ரொம்பவும் அழகாய் இருக்கிறாய்...
   ஏனென்றால் எப்போதுமே நீ
       என்னால் நேசிக்கபடுகிறாய்...

  *தூரத்தில் உன்னைப் பார்த்தேன்...
    நீ தேவதை...
    அருகில் உன்னைப்  பார்த்த பின்புதான் தெரிந்தது...
    நீ தேவதைகளின் தேவதை...
  


* கவிதைக்கு பொய் அழகாம்...
        நீ கவிதை...
   என்னை காதலிக்கவே இல்லை என
       பொய் சொல்லி திரிகிறாய்..
       பொய் அழகாய்தான் இருக்கிறது...


  *உன்னிடம் நிறைய 
        பேச வேண்டுமென்று 
         எனக்கும் ஆசைதான்...
     ஆனால் என் மௌனமே
          உனக்கு புரியாதபோது 
           நான் வேறென்ன பேசுவது?...

   * நெருப்பென்று எழுதி 
          தொட்டபோது சுடவில்லை...
       ஆனால் காகிதத்தில் எழுதி 
           சுவைத்தாலும் இனிக்கிறது...
            உன் பெயர்...

   * ஒரு பொய் சொல்லட்டுமா !
          நீ அழகாக இருக்கிறாய் ...
       ஓர் உண்மை தெரியுமா ...!
           நீ ரொம்பவும் அழகாக இருக்கிறாய்...

   *என் முதல் கடிதத்தை நீ
           படிக்காமல் கூட கிழித்திருக்கலாம்...
      ஆனாலும் அதுதான் நான் 
           உனக்கு எழுதிய நூறாவது கடிதம்...

    *நான் நினைத்ததை எல்லாம் 
          எழுதிவிட்டேனா?
      சொல்ல தெரியவில்லை...
       ஆனால் உன்னை
           பார்க்கும்போதெல்லாம் 
       நிறையவே எழுத நினைக்கிறேன்...  








Monday, 26 September 2011

meyyanavan

 
நீ எனக்கு மட்டுமே வேண்டும் என்கிற 
ஆசை மட்டும் இல்லாவிட்டால்
நானும் கூட புத்தன் தான் 
என்றெல்லாம் பொய் சொல்ல விரும்பவில்லை ...
நீ இல்லாவிட்டாலும் எனக்கு வேறு 
லட்சியங்களை உருவாக்கி கொள்ளமுடியும் ...

உலகத்தின் முதல் அதிசயமே நீதான் என்றும்
உலக அழகியும் கூட 
உன்னைப்போல் அழகில்லை என்னும் 
கவிதைத்தனமான பொய்களில் எல்லாம் 
நம்பிக்கை இல்லை எனக்கு ...
நீ அழகுதான் ஆனாலும் என் வீட்டு கண்ணாடியில் எல்லாம்  
உன் முகம் தெரியவில்லை ...

இருக்கின்ற  ஒரு உயிரையும் நீ கேட்டால் தருவேன் என்று 
என் காதலை சரித்திரமாக்க சம்மதமில்லை எனக்கு ...
சராசரி மனிதன் நான் ...
என்னால் உன்னைத்தான் நேசிக்கமுடியும் ...
உனக்காக
மரணத்தைஎல்லாம் நேசிக்க முடியாது ...

நீ என்ன கேட்டாலும் தருவேன் எனும் வாக்குறுதி எல்லாம் 
வழங்க தயாரில்லை நான் ...
வாழ்க்கையை புரிந்தவன் நான் ...
வானவில்லைஎல்லாம் வளைத்து பிடித்து
உனக்கு தர முடியாது ....

இந்த உலகமே எதிர்த்தாலும் உன்னைத்தான் 
கரம் பிடிப்பேன் என்று கதைஅளக்க விரும்பவில்லை ...
உனக்காக என்னால் என் உறவுகளோடு மட்டும் தான்
போராடமுடியும் ...
உலகத்தோடு எல்லாம் போராடி வெற்றி பெற
முடியாது ...

உனக்காக எத்தனை ஜென்மங்கள் வேண்டுமானாலும் காத்திருப்பேன் 
என்று உனக்குள் கனவுகள் வளர்க்க
தயாரில்லை நான் ...
ஆனாலும் உனக்காக நான் உன் திருமணநாள் வரை 
சலனமின்றி  காத்திருப்பேன்...

நீயும் என்னைப்போலவே என்னை மட்டுமே 
நேசித்தால் நான் யாருக்காகவும் விட்டுத்தராத 
என் பிடிவாதத்தைக் கூட 
உனக்காக விட்டுத் தருவேன் ...

உன்னிடம் எப்பொழுதும் தோற்றாலும் 
உன்னை என் அன்பால் ஜெயிக்கவே ஆசைப்படுகிறேன் ...
பொய்யில்லை நான் ...
நீ நானாக இருக்கும் வரையிலும் 
நானும் நீயாகவே இருப்பேன் ... 

NANBAN...

நண்பன்... 1 *முகத்துக்கு முன்னால் திட்டியும்!!!... முதுகுக்குப் பின்னால் தட்டியும் மட்டுமே கொடுப்பான்!!! நண்பன்!!!... 2 ...