நீ எனக்கு மட்டுமே வேண்டும் என்கிற
ஆசை மட்டும் இல்லாவிட்டால்
நானும் கூட புத்தன் தான்
என்றெல்லாம் பொய் சொல்ல விரும்பவில்லை ...
நீ இல்லாவிட்டாலும் எனக்கு வேறு
லட்சியங்களை உருவாக்கி கொள்ளமுடியும் ...
உன்னைப்போல் அழகில்லை என்னும்
கவிதைத்தனமான பொய்களில் எல்லாம்
நம்பிக்கை இல்லை எனக்கு ...
நீ அழகுதான் ஆனாலும் என் வீட்டு கண்ணாடியில் எல்லாம்
உன் முகம் தெரியவில்லை ...
இருக்கின்ற ஒரு உயிரையும் நீ கேட்டால் தருவேன் என்று
என் காதலை சரித்திரமாக்க சம்மதமில்லை எனக்கு ...
சராசரி மனிதன் நான் ...
என்னால் உன்னைத்தான் நேசிக்கமுடியும் ...
உனக்காக
உனக்காக
மரணத்தைஎல்லாம் நேசிக்க முடியாது ...
நீ என்ன கேட்டாலும் தருவேன் எனும் வாக்குறுதி எல்லாம்
வழங்க தயாரில்லை நான் ...
வாழ்க்கையை புரிந்தவன் நான் ...
வானவில்லைஎல்லாம் வளைத்து பிடித்து
உனக்கு தர முடியாது ....
இந்த உலகமே எதிர்த்தாலும் உன்னைத்தான்
கரம் பிடிப்பேன் என்று கதைஅளக்க விரும்பவில்லை ...
உனக்காக என்னால் என் உறவுகளோடு மட்டும் தான்
போராடமுடியும் ...
உலகத்தோடு எல்லாம் போராடி வெற்றி பெற
முடியாது ...
உனக்காக எத்தனை ஜென்மங்கள் வேண்டுமானாலும் காத்திருப்பேன்
என்று உனக்குள் கனவுகள் வளர்க்க
தயாரில்லை நான் ...
ஆனாலும் உனக்காக நான் உன் திருமணநாள் வரை
சலனமின்றி காத்திருப்பேன்...
நீயும் என்னைப்போலவே என்னை மட்டுமே
நேசித்தால் நான் யாருக்காகவும் விட்டுத்தராத
என் பிடிவாதத்தைக் கூட
உனக்காக விட்டுத் தருவேன் ...
உன்னிடம் எப்பொழுதும் தோற்றாலும்
பொய்யில்லை நான் ...
நீ நானாக இருக்கும் வரையிலும்
நானும் நீயாகவே இருப்பேன் ...
very good meyyanavane...
ReplyDelete