வாய்மை எனப்படுவது யாதெனில்...
*சில்லறை கொடுக்க மட்டுமே
மறந்து போகும் நடத்துனர்...
*காலையில் மறந்து போக
இரவில் கணவன் செய்யும் சத்தியம்...
*மனைவி மறைக்கும்
கருப்பு பண கணக்குகள்...
*கல்லூரி கட்டணம் உயர்த்தி
திரைப்படம் பார்க்கும் மகன்...
*அலுவலக விடுப்பில் அடிக்கடி
இறந்து போகும் இல்லாத பாட்டி...
*தர்மம் கேட்கும் போது
மட்டுமே தட்டுப்படாத சில்லறை...
*கடன் கேட்கும் போது
மட்டுமே காலியாகத் தோன்றும் மணிபர்ஸ்...
*அரசியல்வாதியின்
தேர்தல் நேர வாக்குறுதிகள்...
*தேர்தல் நேர
திடீர் கூட்டணிகள்...
*பேரணிக்காக காட்டப்படும்
மக்களின் எண்ணிக்கை...
*மாநாட்டில் வசூலிக்கப்படும்
கட்சி நிதி கணக்கு...
*பதிவானதாக காட்டப்படும்
இறந்து போனவரின் வாக்கு...
*திருமணத்திற்கு முன் காதலியைப்
பற்றிய காதலனின் வர்ணனைகள்...
*ஜவுளிக்கடையில் வழங்கப்படும்
தள்ளுபடி விற்பனை...
*சிகரெட் பெட்டியின்
எச்சரிக்கை வாசகம்...
*நிதி நிறுவனங்களின்
கவர்ச்சி வட்டி விகிதம்...
*குடும்ப அட்டையில் உள்ள
உறுப்பினர்களின் எண்ணிக்கை...
*ரேஷன் கடைகளில்
வழங்கப்படும் பொருளின் நிறை...
*தொலைக்காட்சி விளம்பரங்களின்
பளீர் வெண்மை...
*வருமான அதிகாரிகள்
வரும்போது மட்டுமே வரும் திடீர் நெஞ்சு வலி...
*ஆட்டோ மீட்டர் காட்டும்
சரியான கட்டணம்...
*தெரிந்தவரைப் பார்த்தவுடன்
பேருந்தில் வரும் திடீர் உறக்கம்...
*எப்பொழுதுமே ஏறாமல்
இருக்கும் நடிகையின் வயது...