அமுதவிஷம்...
1
*நீ ரொம்பவும் அதிர்ஷ்டசாலியாம்...
நிறையபேர் பொறாமைபடுகிறார்கள் ...
. ஆனால் எனக்கு மட்டும்தான் தெரியும்...
நான் எவ்வளவு துரதிர்ஷடசாலி என்று ...
2
*எனக்கு உன் காதலும் தெரியும்...
உன் வலியும் புரியும்...
உனக்கு என் காதலும் புரியாது...
என் வலியும் புரியாது...
3
*உனக்கும் ஆயிரம் பேர் கிடைக்கலாம்...
எனக்கும் ஆயிரம் பேர் கிடைக்கலாம்...
ஆனால் எனக்கு நீயும் உனக்கு நானும்
கிடைத்தால் அதுதான் நம் வாழ்க்கை...
4
*நம் கடைசி சந்திப்பில் உன் கண்களும்
அந்த மௌனமும் காட்டிகொடுத்துவிட்டது...
உனக்கு மறுக்க தெரியவில்லை...
மறைக்கவும் தெரியவில்லை...
எனக்கு வெறுக்க தெரியவில்லை...
விலக புரியவில்லை...
5
*நீ என் உணர்வுகளை நேசித்தாய்...
நான் உன் உணர்வுகளை மதித்தேன்...
உறவுகள் நம்மை எதிர்க்கிறார்கள்...
என்ன செய்வது?
காதலுக்கு மட்டும் இன்னும்
மரியாதை கிடைக்கவே இல்லை...
6
*உன் காதலும் உண்மைதான்...
என் காதலும் உண்மைதான்...
இங்கே நாம் மட்டும்தான் பொய்...
7
*நீ உன் பாசத்திற்காக காதலை
தியாகம் செய்துவிட்டாய்...
நான் என் காதலுக்காக காதலியை
மட்டும் தியாகம் செய்துவிட்டேன்...
ஆனால் ஒரு உண்மையான அன்பை
எந்த விலைக்கும் வாங்க முடியாது...
8
*காலம் என்பதென்னவோ நல்ல மருந்துதான்...
ஆனால் காயங்கள் போதுமடி எனக்கு...
9
*என்னுள் எப்போதும் வலித்துக்கொண்டே இருப்பதால்
நான் காதலையே வெறுக்கிறேன்...
ஆனாலும் ஏனென்று தெரியவில்லை?...
உன்னை எப்போதுமே காதலித்துக்கொண்டே இருக்கிறேன்...
10
*நம் இருவருக்குமே சந்தோஷமாக இருக்கவும் தெரியவில்லை...
சந்தோஷமாக நடிக்கவும் தெரியவில்லை...
ஆனாலும் நாம் ஒருவரின் சந்தோஷத்திற்காக இன்னொருவர்
பிரார்த்தனை செய்துகொண்டே இருக்கிறோம்...
11
*நம் இருவரின் பிரிவில் இழப்பென்பது இருவருக்குமேதான்...
ஏனென்றால் என்னால் மட்டும்தான் உன்னை
அதிகம் உணர்ந்துகொள்ளவும் முடியும்...
உன் அருகாமை மட்டும்தான் எனக்கு எப்போதும் சந்தோஷம் தரும்...
12
*நம் காதலை யாராலுமே அழித்துவிட முடியாது...
ஏனென்றால் என் காதலின் முதல் நினைவுச்சின்னமாய்
நீ எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்...
உன் காதலின் கடைசி நினைவுச்சின்னமாய்
நான் இங்கே ஜடமாகிவிட்டேன்...
13
*நீ சாகக்கூடாது! என உன்னிடம் சத்தியம் வாங்கி இருக்கிறேன்..
அதனால் எனக்காகத்தான் நீ உயிரோடிருகிரோய். ,
உனக்காகவும் அல்லவா நான் இறந்து கொண்டேயிருக்கிறேன்.
No comments:
Post a Comment