Sunday, 11 August 2013

ARPANIKAPATTAVAN...

அர்ப்பணிக்கப்பட்டவன்...

**நம்மைப் போலத்தான் அவனும்...

**பழைய பாடல்களையே 
தாலாட்டாய் அனுபவித்து கண்மூடி 
உறங்க அவனுக்கும் பிடிக்கும்...

**சித்திரை மாதத்து 
மழைத்துளியில் இருந்து எழும் 
மண்வாசனையை அவனுக்கும் பிடிக்கும்...

**கடலையைக் கொறித்துக் கொண்டே 
கடற்கரை மணலில் கால் புதைய  புதைய 
நடக்க அவனுக்கும் பிடிக்கும்...

**நம்மைப் போலத்தான் அவனும்...


**தனக்குப்  பிடிக்கும் நடிகனின் 
திரைப்படத்தை முதல்நாளே 
முண்டியடித்துப் பார்க்க 
அவனுக்கும் ஆர்வம் வரும்...

**தன் குடும்பத்து 
சோகத்திலும் சந்தோஷத்திலும் 
கலந்து கொள்ள அவனுக்கும்  ஆசை பொங்கும்...

**இந்தியா ஒவ்வொரு முறை 
விளையாட்டில் வெற்றி 
கொள்ளும்போதெல்லாம் 
எல்லோருடனும் கொடிபிடித்து 
கொண்டாட அவனுக்கும் ஆசை துள்ளும்...

**நம்மைப் போலத்தான் அவனும்...


**வரப்போகும் மனைவியைப்  பற்றியும் 
பின்பு தான் வளர்க்கப் போகும் 
குழந்தையைப் பற்றியும் 
அவனுக்கும் கனவுகள் வரும்...

**அதிகாலை மார்கழிப் பனியில் 
கம்பளிக்குள் உறக்கம் அவனுக்கும் சுகமாய் வரும்...

**சன்னலோர இருக்கையில் அமர்ந்து 
பிரயாணம் செய்ய அவனுக்கும் ஆர்வம்  இருக்கும்..

**நேற்றுவரையிலும் 
நம்மைப் போலத்தான்  அவனும்...

**அவன் நம்மின் நாளைய பாதுகாப்புக்காக 
இன்று மரணத்தோடு எல்லையில் 
போராடிக் கொண்டிருக்கிறான்...

Friday, 9 August 2013

KATHIRUNTHA NERATHILL...

காத்திருந்த நேரத்தில்...

*உன் மூச்சுக்காற்றை
  சுவாசிக்க வேண்டிய நான்
  மற்றவரின்
  சிகரெட் புகையை சுவாசித்தேன்...


*என் நேரத்தை நொந்தபடி
  கேட்டவருக்கெல்லாம்
  நேரம் சொன்னேன்...

*கண்ணில் பட்ட
  தலைப்புச் செய்தியை
  நூறுமுறை படித்துச் சலித்தேன்...

*தர்மம் தராமல்
  தரமற்ற வசவுகள் தாங்கினேன் ...


*லட்சமும் கோடியும்
  கொட்டித்தர வந்தவனை 
  வேண்டாமென்று  விரட்டினேன்...

*உன்னைச் சுமந்துவராத 
  பேருந்துகளையெல்லாம் 
  உள்ளுக்குள் சபித்தேன்...

*உன்னைவிட அழகான பெண்ணை 
  ரகசியமாய் ஓரக்கண்ணால்  ரசித்தேன்...


*ஏலம்விடும் பொருள்களுக்கு 
  நடுவில் ஒரு ஏளனபொருளாய்  நின்றேன்...

*காத்திருந்த அந்த
  கடைசி வினாடியிலாவது 
  ஏமாற்றாமல் நீ வந்திருந்தால் 
  உனக்காக காத்திருத்தல் 
  எப்போதுமே  சுகம்தான்...
  
  

Saturday, 27 July 2013

INDIA 2020

வருங்கால இந்தியா...


 *தீ தொடாத தென்றல் தெருவெங்கும் வேண்டும்...

*தீபங்கள் ஏற்ற மட்டுமே தீக்குச்சி வேண்டும்...

*திருக்குறள் தரும் துப்பாக்கி வேண்டும்...

*வெடிகுண்டு வெடித்து பூக்கள் மலர வேண்டும்...

*முன்ஜாமீன் கேட்காத தலைமைகள் வேண்டும்...

*தலைவர்கள் சிலைகள் இல்லாத முச்சந்தி வேண்டும்...


*காவிரியே கங்கையாய் நிலம் பாய வேண்டும்...

*மதம் இல்லாத மனிதன் மானிடனாய் பிறத்தல் வேண்டும்...

*பணம் எண்ணும் பட்டதாரிகள் பாரெங்கும் வேண்டும்...

*வேலை வாய்ப்பு அலுவகங்கள் வெறிச்சோடிட வேண்டும்...

*பெண் குழந்தை பேணும் பெற்றோர்கள் வேண்டும்...



*படிக்காத பெண்டிருக்கும் பாதுகாப்பு வேண்டும்...

*தற்கொலைகள் நடக்காத லாக்கப்கள் வேண்டும்...

*கற்பைப் பாதுகாக்கும் காவல் நிலையங்கள் வேண்டும்...

*ஆப்பிள் மட்டுமே சிகப்பாய் காஷ்மீரம் வேண்டும்...



*கோட்சேக்கள் கூட காந்தியாய் மனம் மாற வேண்டும்...

*துண்டு இல்லாத பட்ஜெட் திங்கள் தோறும் வேண்டும்...

*விவசாய நிலங்களில் விவசாயம் வேண்டும்...

*விளைபொருட்களுக்கு சரியாய் விலை வேண்டும்...

*விலை மதிப்பில்லாத கல்வி விலையில்லாமல் வேண்டும்...

*இலஞ்சம் இல்லாத ஒருமைப்பாடு வேண்டும்...

*அவசரமாய் செயல்படும் அதிகாரிகள் வேண்டும்...



*வஞ்சங்கள் இல்லாத நெஞ்சங்கள் வேண்டும்...

*எல்லைகள்  பாராத உள்ளங்கள் வேண்டும்...

*கோவிலை தேடாத தெய்வம் வேண்டும்...

*உலக வங்கி நம்மிடம் கடன் கேட்க வேண்டும்...

*உலக நாடுகளுக்கு உதவி செய்ய வேண்டும்...


*வன்முறை இல்லாத வருங்கால பாரதமே!
         வருகின்ற நூற்றாண்டிலாவது நீ வரலாறாய் வேண்டும்...

Wednesday, 24 July 2013

KALAMELLAM KATHAL VAZHGA...

    காலமெல்லாம் காதல் வாழ்க...

*திரும்பிப் பார்க்கிறேன்...
  ஆஹா!...
  அந்த நாள் நான் 
  துள்ளித் திரிந்த காலம் அல்லவா!

*அப்போதெல்லாம் நான் ஒரு 
   தனிக்காட்டு ராஜா...

*எதிர்பாராததுதான் எங்கள்
   அந்த நேருக்கு நேர் சந்திப்பு...

*காதலிக்க நேரமில்லை ...
  சொன்ன எனக்கு 
  நினைவெல்லாம் நித்யா ஆனாள்...

*தினந்தோறும் 
  இரவும் பகலும் 
  என்னுள் 
  வண்ணக் கனவுகள்... 

*இனியவளே !
  நீயொரு தேவதை !
  ரோஜா !
  செம்பருத்தி !
  உன் இதழ் ஆவாரம்பூ !
  என்றெல்லாம் 
  வர்ணனை செய்து 
  என் நெஞ்சினிலே 
  குடியிருக்கும் 
  காதல் தேவதை நீதான் 
  என்று ப்ரியமுடன் 
  ரசிகன் என கையொப்பமிட்டு 
  அதிகாலையிலேயே எழுந்து 
  சோப்பு சீப்பு கண்ணாடி முடித்து 
  ஜீன்ஸ் T-ஷர்ட் அணிந்து 
  காதலுக்கு மரியாதை செய்ய 
  அந்த கடிதத்தோடு 
  ஆடி வெள்ளியிலே 
  அம்மன் கோயில் வாசலிலே 
  அவள் வருவாளா! என 
  ஆசையோடு காத்திருந்தேன் ...

*இப்பொழுதுதான் நினைத்தேன் 
  வந்தாய் ! இது 
  உயிரே... உனக்காக...
  கடிதம் நீட்டினேன்...

*நீயா ! நாம் 
  நல்ல நண்பர்கள் 
  அல்லவா !
  நம்முடைய நட்பு 
  காதலா! காதலா !
  ஏளனமாக சிரித்தாள்...

*என்னுடைய 
  காதல் கோட்டை 
  கலைந்து போனது... 

*இப்பொழுது இதோ !
  இன்னொரு தேவதாஸ் !

*சொல்லாமலே !
  காதலி 
  உனக்காக நான் 
  காலமெல்லாம் காத்திருப்பேன்...

*ஏனென்றால் என் 
  காதல் ஒரு கவிதை...

*நீயும் ஒரு காதல் கவிதை...

*உன்னை என்றுமே 
  என் நெஞ்சம் மறப்பதில்லை...

*அதில் கவிதை பாடும்
  அலைகள் ஓய்வதில்லை...

*என் நினைவிருக்கும் வரை 
  நம் நினைவுகள் எல்லாமே 
  எனக்கு 
  சுகமான சுமைகள் தான்...


NANBAN...

நண்பன்... 1 *முகத்துக்கு முன்னால் திட்டியும்!!!... முதுகுக்குப் பின்னால் தட்டியும் மட்டுமே கொடுப்பான்!!! நண்பன்!!!... 2 ...