காத்திருந்த நேரத்தில்...
*உன் மூச்சுக்காற்றை
சுவாசிக்க வேண்டிய நான்
மற்றவரின்
சிகரெட் புகையை சுவாசித்தேன்...
*என் நேரத்தை நொந்தபடி
கேட்டவருக்கெல்லாம்
நேரம் சொன்னேன்...
*கண்ணில் பட்ட
தலைப்புச் செய்தியை
நூறுமுறை படித்துச் சலித்தேன்...
*தர்மம் தராமல்
தரமற்ற வசவுகள் தாங்கினேன் ...
*லட்சமும் கோடியும்
கொட்டித்தர வந்தவனை
வேண்டாமென்று விரட்டினேன்...
*உன்னைச் சுமந்துவராத
பேருந்துகளையெல்லாம்
உள்ளுக்குள் சபித்தேன்...
*உன்னைவிட அழகான பெண்ணை
*ஏலம்விடும் பொருள்களுக்கு
நடுவில் ஒரு ஏளனபொருளாய் நின்றேன்...
*காத்திருந்த அந்த
கடைசி வினாடியிலாவது
ஏமாற்றாமல் நீ வந்திருந்தால்
உனக்காக காத்திருத்தல்
எப்போதுமே சுகம்தான்...
No comments:
Post a Comment