ம. பிரபாகர்.
*இரண்டு செய்திகளை இன்றுவரையில்
நான் நம்பவே இல்லை.
*அன்று அண்ணன் பிரபாகரனின் வீர மரணம்...
இன்று தம்பி பிரபாகரின் திடீர் மரணம்...
*எத்தனையோ மரணங்கள் பார்த்திருந்தாலும்
உன் மரணத்தை மட்டும் மன்னிக்கவே முடியவில்லை.
*நீதான் வேண்டும் என்று விதியே கேட்டாலும் என்
ஆயுளில் ஒன்றை உனக்கு கொடுத்திருப்பேனே!..
*என் இறப்புக்கு நானே அழ முடியாது என்றுதான்
உன் இழப்பில் அவ்வளவு அழுதேன்...
*தூங்குவது போலும் சாக்காடு என்ற வள்ளுவரே!
இவன் விழிப்பது எப்போது?
*மத நம்பிக்கையே இல்லாவிட்டாலும் நீ மூன்றாம் நாள்
உயிர்த்தெழுந்து வருவாய் என்று நம்பினேன்...
*எல்லா அரசாங்க விதிகளும் உடனடியாய் சொல்வாயே !
உன் விதி மட்டும் உனக்கு ஏன் தெரியாமல் போனது?
*இத்தனை வயதில் இப்படி இப்படி இருப்பேன் என்றாயே !
முப்பதுகளில் எப்படி முடிந்து போனாய் !
*மரணத்தைவிட பிரிவுதான் வலி என்று நினைத்திருந்தேன்...
பிரிவைவிட மரணம் கொடியது...
* உன் கண்டிப்பில் உள்ள உரிமை உன் நண்பர்களுக்கு பிடிக்கும்...
உன் எதிரிகளுக்கு கூட உன் நேர்மை பிடிக்கும்...
*கல்லும் முள்ளும் கடந்து இப்போதுதான் நீ வாழ்வை தொடங்கினாய்...
உன் உயிர் நீ காணும் முன்பே ஏன் சென்றாய்...
*நண்பர்களே! காயமே இது பொய்யடா!
சித்தர் பாடலை நம்பாதீர்கள்...
*உடம்பை வளர்த்தேனே! உயிர் வளர்த்தேனே!
திருமூலர் வழி செல்லுங்கள்...
*முப்பது தாண்டியதா !
உப்பு சர்க்கரை குறையுங்கள்...
கொழுப்பை கட்டுபடுத்துங்கள்...
மது புகையை மறவுங்கள்...
வருடத்திற்கு ஒருநாள்
மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுங்கள்...
*மருத்துவ செலவு என்பது எதிர்கால முதலீடு
செலவழிக்க தயங்காதீர்கள்...
*இனியும் ஒரு இழப்பை தாங்க இதயத்திற்கு வலிமை இல்லை...
Let the soul of prabakar read this...
ReplyDeletePoems are the expressions of strong feelings this is one of the best ones..