இனி எல்லோரும் கலாம் ஆக
கனவு காணுங்கள்...
* கவி எழுத்தாளன் மெய்ஞானி விஞ்ஞானி ஆசிரியன் ...
நீ சகலகலா வல்லவன்...
அரசியல் செய்யாத நல்லவன்...
*செய்திதாள் விற்று நீ படித்தாய்....
இன்று உலக தலைப்பு செய்தியானாய்...
*கடைசிவரையிலும் ஆசிரியராய் ..இருந்தாய்..
உன் ஆசைப்படி மாணவர்கள் மத்தியில் மறைந்தாய்...
உன் பிறப்பும் இறப்பும் சரித்திரம்...
*இந்தியா தான் உன் குடும்பம்....
மாணவர்கள் தான் உன் உலகம்....
*நீ எங்களின் இன்னொரு தேசப்பிதா ...
மக்கள் ஜனாதிபதி...
உருவ வழிபாட்டில் நம்பிக்கை உனக்கு
இல்லாவிட்டாலும் நீயும் எங்கள் தெய்வம்...
*தென்கோடியில் பிறந்தாய்...
தலைநகரில் முதல் குடிமகனாய் உயர்ந்தாய்...
முதல் குடிமகன்களில் நீதான் முதல்தரம்...
அதிர்ஷ்டத்தை நம்பாத
அக்னிசிறகு நீ...
*உழைத்தால் நிச்சயம் உயரலாம்...
நேர்மையாய் இருந்தால் மதிக்கப்படலாம்...
எந்த வயதிலும் சுறுசுறுப்பாய் இருக்கலாம்...
தாய்மொழியில் படித்தால் முன்னேறலாம்...
நீதான் உதாரணம் கலாம்...
* பொக்ரான் வெடிகுண்டு வெடித்தாலும்
நீ பறக்க வைத்தாய் வெள்ளைப்புறா...
ஏவுகணையில் கூட நீ பூக்கூடை வைக்க .விரும்பினாய்..
*ஊழல் இல்லாத இந்தியா...
நதிகள் இணைந்த நாடு...
உலக நல்லரசு... வல்லரசு...
இந்தியா 2020...
உன் கனவு தான் இனி எல்லோரின் கனவு...
*கலாம்...உனக்கு சலாம்...
உன்னை மனதில் வைக்கும்
எல்லோரும் சாதிக்கலாம்...