Wednesday, 29 July 2015

A.P.J. ABDUL KALAM....

  *கனவு காணுங்கள் !
   இனி எல்லோரும்  கலாம்  ஆக
   கனவு காணுங்கள்...

* கவி  எழுத்தாளன்  மெய்ஞானி  விஞ்ஞானி  ஆசிரியன் ... 
    நீ சகலகலா வல்லவன்...
    அரசியல் செய்யாத நல்லவன்...

 *செய்திதாள் விற்று நீ படித்தாய்....
   இன்று உலக தலைப்பு செய்தியானாய்...
Photo Gallery
*கடைசிவரையிலும் ஆசிரியராய்  ..இருந்தாய்..
  உன் ஆசைப்படி  மாணவர்கள்  மத்தியில் மறைந்தாய்...
  உன் பிறப்பும் இறப்பும் சரித்திரம்...

*இந்தியா தான் உன் குடும்பம்....
  மாணவர்கள் தான் உன் உலகம்....
  
*நீ எங்களின் இன்னொரு தேசப்பிதா ...
   மக்கள் ஜனாதிபதி...
   உருவ வழிபாட்டில்  நம்பிக்கை உனக்கு 
   இல்லாவிட்டாலும்  நீயும் எங்கள்  தெய்வம்...

*தென்கோடியில் பிறந்தாய்...
  தலைநகரில் முதல் குடிமகனாய் உயர்ந்தாய்...
  முதல் குடிமகன்களில் நீதான் முதல்தரம்...
  அதிர்ஷ்டத்தை நம்பாத 
  அக்னிசிறகு நீ...

                                                  

*உழைத்தால் நிச்சயம் உயரலாம்...
    நேர்மையாய் இருந்தால் மதிக்கப்படலாம்...
    எந்த வயதிலும் சுறுசுறுப்பாய் இருக்கலாம்...
   தாய்மொழியில் படித்தால் முன்னேறலாம்...
    நீதான் உதாரணம் கலாம்...

* பொக்ரான்  வெடிகுண்டு வெடித்தாலும் 
    நீ பறக்க வைத்தாய் வெள்ளைப்புறா...
    ஏவுகணையில் கூட நீ பூக்கூடை வைக்க .விரும்பினாய்..

                                             
    
*ஊழல் இல்லாத இந்தியா...
  நதிகள் இணைந்த நாடு...
  உலக நல்லரசு... வல்லரசு...
  இந்தியா 2020...
   உன் கனவு தான்  இனி எல்லோரின் கனவு...

*கலாம்...உனக்கு சலாம்...
  உன்னை மனதில் வைக்கும் 
எல்லோரும் சாதிக்கலாம்...
    


    
    
   
  

3 comments:

NANBAN...

நண்பன்... 1 *முகத்துக்கு முன்னால் திட்டியும்!!!... முதுகுக்குப் பின்னால் தட்டியும் மட்டுமே கொடுப்பான்!!! நண்பன்!!!... 2 ...