ஒத்திகை..
*உங்களை எங்கேயோ பார்த்திருக்கேன்!...
நம் முதல் சந்திப்பிலேயே உன் கண்களில்
தெரிந்த மின்னலும்...
*புகைப்படத்திலும் கூட நான்
அழகாய் இருப்பதாய் நீ சொன்னதும்...
*திரைப்பாடல்களில் ஆண் குரல் வரிகளை நான் பாட...
பெண் குரலில் நீ தொடர்ந்ததும்...
*செய்தித்தாளில் வார ராசி பலன்களை
என்னுடைய ராசிக்கு நீ பார்த்துச் சொன்னதும்...
*பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென்று
மௌனமாகி என்னையே பார்த்துக்கொண்டிருந்ததும்...
*நேற்றுதான் உன்னிடத்தில்
என்னைக் கொடுத்தேன்...பாடல்...திரைப்படம்...பார்த்தேன்...
சொல்லி நீ தலை குனிந்ததும்...
*உங்களுக்காகத்தான் சமைத்து எடுத்து வந்தேன்...
நான் ருசித்து சாப்பிடுவதை நீ ரசித்ததும்...
*என் பிறந்த நாள் வரும் முன்பே
நீ அடிக்கடி நினைவுபடுத்தியதும்...
*நேத்து ராத்திரி நீங்க தான்
சிகரெட்டால் சுட்டிங்க!
உன் கையில் உள்ள காயத்துக்கு
நீ விளக்கம் சொல்லியதும்...
*எந்தப் பெண் என்னிடம் வலியப் பேசினாலும்
உன் கண்களில் தெரிந்த பொறாமையும்...
*எந்தப் பெண்ணையாவது நான் அழகென்று
சொல்லும்போது உன்
கண்களின் கோபமும்....
*கல்விச்சுற்றுலாவின் பேருந்துப் பயணத்தில்
கண்மூடி என் தோளில் சாய்ந்து நீ உறங்கியதும்...
*கடல் அலையில் நீ என் கை பிடித்து...
நனைத்து என்னோடு நீ விளையாடியதும்...
*மரியாதை இல்லாமல் எனை அழைத்து...
வெட்கப்பட்டு நீ தலை குனிந்ததும்...
*என்னைபோல்தான் மாப்பிப்ளை
வேண்டுமென்று நீ என்னிடமே கேட்டதும்...
*நாளைக்கு நீங்க வர மாட்டிங்களா!
விடுப்பில் நான் சென்றபோது
உன் வினாவில் தெரிந்த ஏக்கமும்...
*எல்லாமே உன் வருங்கால வாழ்கைக்கான
ஒத்திகைதான்...
உன் கணவனிடம்
என்னை நல்ல நண்பனென்று
அறிமுகப்படுத்தியபோது தெரிந்து கொண்டேன்...
No comments:
Post a Comment