வருங்கால இந்தியா...
*தீபங்கள் ஏற்ற மட்டுமே தீக்குச்சி வேண்டும்...
*திருக்குறள் தரும் துப்பாக்கி வேண்டும்...
*வெடிகுண்டு வெடித்து பூக்கள் மலர வேண்டும்...
*முன்ஜாமீன் கேட்காத தலைமைகள் வேண்டும்...
*தலைவர்கள் சிலைகள் இல்லாத முச்சந்தி வேண்டும்...
*காவிரியே கங்கையாய் நிலம் பாய வேண்டும்...
*மதம் இல்லாத மனிதன் மானிடனாய் பிறத்தல் வேண்டும்...
*பணம் எண்ணும் பட்டதாரிகள் பாரெங்கும் வேண்டும்...
*வேலை வாய்ப்பு அலுவகங்கள் வெறிச்சோடிட வேண்டும்...
*பெண் குழந்தை பேணும் பெற்றோர்கள் வேண்டும்...
*படிக்காத பெண்டிருக்கும் பாதுகாப்பு வேண்டும்...
*தற்கொலைகள் நடக்காத லாக்கப்கள் வேண்டும்...
*கற்பைப் பாதுகாக்கும் காவல் நிலையங்கள் வேண்டும்...
*ஆப்பிள் மட்டுமே சிகப்பாய் காஷ்மீரம் வேண்டும்...
*கோட்சேக்கள் கூட காந்தியாய் மனம் மாற வேண்டும்...
*துண்டு இல்லாத பட்ஜெட் திங்கள் தோறும் வேண்டும்...
*விவசாய நிலங்களில் விவசாயம் வேண்டும்...
*விளைபொருட்களுக்கு சரியாய் விலை வேண்டும்...
*விளைபொருட்களுக்கு சரியாய் விலை வேண்டும்...
*விலை மதிப்பில்லாத கல்வி விலையில்லாமல் வேண்டும்...
*இலஞ்சம் இல்லாத ஒருமைப்பாடு வேண்டும்...
*அவசரமாய் செயல்படும் அதிகாரிகள் வேண்டும்...
*வஞ்சங்கள் இல்லாத நெஞ்சங்கள் வேண்டும்...
*எல்லைகள் பாராத உள்ளங்கள் வேண்டும்...
*கோவிலை தேடாத தெய்வம் வேண்டும்...
*உலக வங்கி நம்மிடம் கடன் கேட்க வேண்டும்...
*உலக நாடுகளுக்கு உதவி செய்ய வேண்டும்...
*வன்முறை இல்லாத வருங்கால பாரதமே!
வருகின்ற நூற்றாண்டிலாவது நீ வரலாறாய் வேண்டும்...