தந்திக்கோர் தந்தி...
*நீ வரும்போது
வருந்தியவர்கள்தான் அதிகம்...
*இறப்பு செய்திகள்தான் நீ அதிகம் சுமந்திருக்கிறாய்...
*நீ வருகிறாய் என்றாலே நிறைய பேருக்கு
கண்ணீர்தான் வரும் ...
*வாழ்த்து செய்திகளையும்
அவ்வபோது நீ அனுப்பி இருக்கிறாய்...
*நீ இழப்புகளை சுமந்தாய்...
சந்தோஷங்களை கடத்தினாய்...
*நீதான் இன்றைய புறா விடு தூது...
* நவீன உலகத்தில் நீ பழதாகிவிட்டாய்...
*செல்போன் இன்டர்நெட் SMS
உன்னை கடத்திவிட்டார்கள்...
*நாளை வாழ்த்து அட்டைகளும் வழக்கொழிந்து போகலாம்...
*இன்றைய வாழ்த்துகளில் உயிர் இல்லை...
*இன்றுதான் உனக்கு கடைசி நாள்...
உன் மறைவு செய்திதான்
நான் அனுப்பும் கடைசி தந்தி...
No comments:
Post a Comment