*கணக்கும் காதலும் ஒன்றுதான்...
*பிரிக்க முடியாத புள்ளியின்
இறக்கும் வரையில் மறக்க முடியாத
முதல் சந்திப்பில் இருந்து தொடங்குகிறது காதல்.
*எண்ணிலிருந்து தொடங்குகிறது கணக்கு...
கண்ணிலிருந்து தொடங்குகிறது காதல்...
*முடிவிலிப் புள்ளியில் இணைகோடுகள்
சந்திக்கின்றன சொல்கிறது கணக்கு...
வாழ்க்கை முடிவதற்குள் முதல்
காதலியை சந்திக்க துடிக்கிறது மனசு...
*கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல்
இல்லாமல் கணக்கில்லை...
சந்திப்புகளை கூட்டுதல் பேசிக் கழித்தல்
மகிழ்ச்சியை பெருக்குதல் வருங்காலத்தை
வகுத்தல் காதலில் உண்டு...
விதியில் தீர்க்கபடுகிறது கணக்கு...
சதியால் பிரிக்கப்பட்டு
விதிப்படி இணைவோம் எனும்
நம்பிக்கையில் வாழ்கிறது காதல்...
இறுதி மதிப்புக்கு எல்லையும் இல்லை...
கிடைக்கும் போது அன்பின் மதிப்பு தெரிவதில்லை...
இழந்த அன்பிற்கு ஈடாக
எந்த விலையும் இல்லை...
*மூடிய வளைவரைகள் கணக்கில் அழகு...
சொர்க்கத்தில் சேராவிட்டாலும்
சொல்லாத காதல் சுகமான சுமை தான்...
*முக்கோனவியல்தான் கணக்கின் முக்கிய ஒரு பகுதி...
முக்கோணக் காதல் இல்லாத கதை
திரைப்படத்தில் வெற்றி இல்லை...
*விடை தெரியாத பல கனக்குகள் இன்றும் உண்டு...
விடை தெரியாத பல கேள்விகள்
பிரிந்த காதலில் உண்டு...
*கணக்கு புரியாமல் படிப்பை இழந்தவர்கள் நிறைய பேர்...
காதல் புரியாமல் வாழ்கையை தொலைத்தவர்கள் நிறைய பேர்...
*கணக்கு கஷ்டம் தான்...
ஆனால் அறிவின் முழுமை...
உண்மைக் காதலும் தேன்கூடு போலதான்...
வாழ்ககையின் முழுமை...
*கணக்குதான் அறிவியலின் அரசி...
காதல் இல்லாமல் வாழ்ககையா ?...
நீ கொஞ்சம் மாத்தி யோசி...
*கஷ்டப்பட்டும் இஷ்டப்பட்டும் படித்தால் தான் கணக்கு வரும்...
இஷ்டப்பட்டும் கஷ்டப்பட்டால் தான் காதல் கைகூடும்...
*கணக்கும் காதலும் ஒன்றுதான்...
சிலருக்குதான் வரும்...
பலருக்கு வருவதே இல்லை...
*கணக்கும் காதலும் அபூர்வமானது...
மிகச் சிலருக்கு தான் புரிகிறது...
பலருக்கு புரிவதே இல்லை...