இரத்தினம் சுப்பிரமணியன்...
*பாரதிக்கு கணக்கு பிணக்கு ஆமணக்கு...
*இவரிடம் படித்தாலோ சொல்வார் ...
கணக்கு கல்கண்டு பஞ்சாமிர்தம்...
*ஆண்டுக்கு ஆண்டு இவரின் தேர்ச்சி நூற்றுக்கு நூறு...
இவரிடம் பயின்ற மாணவர்கள் நிறைய வாங்கியிருக்கிறார்கள்
இருநூறுக்கு இருநூறு...
*கணித துறையின் தல...
கணக்கு இவருக்கு கை வந்த கலை...
*பிரம்பை எடுக்காமலேயே மாணவர்கள்
நரம்பை நாடி பிடிக்கும் மருத்துவர் இவர்...
*கூட்டினாலும் கழித்தாலும் மாறாத மாறிலி...
இவர் புகழ் மட்டும் "மாறி"க்கொண்டேயிருக்கும்...
வருடா வருடம் ஏறிக்கொண்டேயிருக்கும்...
*மாணவர்களிடம் இவருக்கு தான் முதல் .இடம்..
இவருடைய மதிப்பு + infinity மட்டுமல்ல...
மேல... அதுக்கும் மேல...
*இவரிடம் படித்து கணக்கில் தோல்வி பெற்றவன்
வாழ்க்கையிலும் வெற்றி பெற முடியாது...
*அலுவலகத்திலும் இருப்பார்...
ஆய்வுகூடத்திலும் இருப்பார்...
தூணிலும் துரும்பிலும் மட்டுமல்ல...
எங்கள் பள்ளியின் PG தூண்...
*தலைமைக்கு இவர்தான் வலதுகரம்...
இவரால் தலைமைக்கு இல்லை தலைவலி... கலவரம்...
*கணக்கு பிடிக்காதவர்களுக்கும் பிடித்த
கணக்கு பிள்ளை இவர்...
*இவருடைய அன்பு தான் எல்லோருக்கும் பலம்...
*அணிகளை தரம் பிரித்து விளக்குவதில் திருத்தணி...
அண்ணாமலைக்கே பாடம் போதிப்போர் இந்த சுவாமிமலை ...
அண்ணாமலைக்கே பாடம் போதிப்போர் இந்த சுவாமிமலை ...
பஞ்சாமிர்தமாய் கணக்கை புகட்டுவதில் பழநி...
அறுபடை வீடு அருளும் பெற்ற .பழமுதிர்சோலை..
புகழின் உச்சியில் திருபரங்குன்றம்....
புகழின் உச்சியில் திருபரங்குன்றம்....
அலைகடலென மாணவர்களின் அன்பு பிடியில் திருச்செந்தூர் ...
*சுருங்க சொன்னால் சுக்குக்கு மிஞ்சிய சித்த மருந்தும் இல்லை...
எங்கள் சுப்பிரமணியத்தை மிஞ்சிய கணித ஆசிரியரும் இல்லை...
No comments:
Post a Comment