*இருப்பதைக் கொண்டு திருப்தி அடையாமல்
இன்னும் இன்னும் சேர்க்க ஆசை வைக்கும்...
*முயற்சிகள் இல்லாமலேயே முன்னேற துடிக்கும்...
*வெற்றி கிடைக்கும் போதெல்லாம்
உழைப்பினால் வந்ததென்று இறுமாப்பு .கொள்ளும்..
*தோல்வி கிடைக்கும்போது மட்டும்
அதிர்ஷ்டத்தின் மீது பழி போடும்...
*தவறான செயல்களையும்
சரியென்று நியாயம் கற்பிக்கும்...
*உலகமே இப்படித்தானென்று செய்கின்ற
குற்றத்துக்கு விளக்கம் சொல்லும்...
*தெய்வத்தையும்கூட செய்த பாவத்துக்கு பங்குதாரர் ஆக்கும்..
*ஊர் பொது சண்டையை விசாரித்து விளக்காமல்
அமைதியாய் கைகட்டி வேடிக்கை ..பார்க்கும்..
*அஞ்சுக்கும் பத்துக்குக்கும் அல்லாடும்
அன்றாடம் காய்ச்சியிடம் அநியாமாய்
பேரம்பேசி பொருட்கள் வாங்கும்...
*அன்பான துணை இருந்தாலும் அங்கங்கு பார்வையை அலையவிடும்...
*அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணம் கட்டி ஏமாறும்...
*அதிர்ஷ்ட சீட்டு வாங்கும்போதே பரிசு கிடைத்ததாய்
நினைத்து முதல் பரிசு பணத்துக்கு இப்போதே கணக்குபோடும்...
*அதிக வேகம் ஆபத்து தெரிந்தே விதிகளை மீறி
வாகனத்தில் பறக்கும்...
*நம்பிக்கையை மீறி சில இடங்களில்
சந்தேகம் வளர்க்கும்...
*தோல்விகளின்போது மட்டும் தெய்வத்தின் துணை தேடும்...
*சிலவற்றை மன்னித்து மறந்துவிடுகிறது...
அதனால்தான் இன்றும் மனிதனாய் இருக்கிறது...
*சிலவற்றை எப்போதுமே மறந்து போவதில்லை...
அதனால்தான் என்றும் மனிதனாய் இருக்கிறது...