சராசரி...
*என்னுள் கோபம் உண்டு...
ஆனால் பொறுமையை இழந்தவனில்லை...
வன்முறையிலும் எனக்கு நம்பிக்கை இல்லை...
*என்னுள் கனவுகள் உண்டு...
ஆனால் நிறைய நாட்கள் நான் அதில் நல்ல
உறக்கத்தைத்தான் தேடியிருக்கிறேன்...
*என்னுள் தோல்விகள் உண்டு...
ஆனாலும் இன்னும் என் மனம்
நம்பிக்கையை மட்டும் இழந்ததில்லை...
கடைசியில் நான்தான் ஜெயித்திருக்கிறேன்...
*என்னுள் காதல் உண்டு...
அதனால்தான் என் உணர்வுகளை நான்
உயிரோடும் எரித்துவிட்டேன்...
*என்னுள் தேடல்கள் உண்டு...
அதனை நான் என்னில் ஆரம்பித்து
உன்னோடு முடித்துவிட்டேன்...
**என்னுள் சுயநலம் உண்டு...
அதற்க்காக நான் என் வாழ்க்கையே
பலி கொடுத்துவிட்டேன்...
**என்னுள் காயங்கள் உண்டு...
ஆனால் காயங்களையே
மருந்தாக்கிக் கொள்ளும் மனவலிமையும் உண்டு...
**எனக்கும் ஏமாற்றங்கள் உண்டு...
என்னையும் நான் ஏமாற்றிக் கொண்டதுண்டு...
ஆனால் யாரையுமே நான் ஏமாற்றியதில்லை...
**எனக்கும் சலனங்கள் உண்டு...
ஆனாலும் சில சந்தர்ப்பங்களின் போதும்கூட
என் உணர்ச்சிகள் எல்லை மீறியதில்லை...
**என்னுள் லட்சியங்கள் உண்டு...
ஆனாலும் இன்றுவரையில்
நானொரு யதார்த்தவாதி தான்...
**அவ்வப்போது நான்
தலைகுனிந்து நடப்பதுண்டு...
இன்றுவரையில் எங்கும்
தலைகுனிந்து நின்றதில்லை...
**என்னுள் மிருகம் உண்டு...
ஆயினும் இன்னும் எந்த நிலையிலும்
என் மனிதம் இன்னும் செத்துவிடவில்லை...
super
ReplyDelete