*நான்காம் நிலை...
*ஒவ்வோர் நாளுமே எனக்கு இப்படித்தான் ஆரம்பிக்கிறது...
*காலையில் எழும்போதே தரையில் கிடப்பேன்...
*தலையணையும்... மெத்தையும் தனியாய் கிடக்கும்...
*பால் கார்டுக்கு பதிலாக ரேஷன் கார்டு கொண்டு
பால்பூத்துக்கு சென்று பாதியில் திரும்பி வருவேன்...
*குளியலறையில் கண்களை திறந்து கொண்டே
சோப்பு போட்டு கண் எரிச்சலில் அவதிபடுவேன்...
*சாப்பிட்டுவிட்டு பைக் சாவியை இலக்கில்லாமல் தேடி கடைசியில் சட்டைப் பையில் இருந்து எடுப்பேன்...
*வீட்டிலே சொல்லிட்டு வந்துட்டியா!
எதிரில் வரும் வாகன ஓட்டிகளிடம் வசவு வாங்குவேன்...
*திரையரங்கில் டிக்கெட் எடுத்து முன் இருக்கை
இடங்களில் எல்லாம் உன்னை தேடி ஏமாந்து
இடைவேளையிலேயே எழுந்து வருவேன்...
*வீட்டுக்கு வரும் உறவினர்களை எல்லாம் சரியாய் விசாரிக்காமல்
எல்லோரிடமும் பேச்சு வாங்குவேன்...
*கூரியர்.. போஸ்ட்... யார் கடந்து போனாலும்
திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டே இருப்பேன்...
*பைத்தியமா நீ! நண்பன் உலுக்கியபோதுதான்
என்ன கேட்டாய்! கலைந்தேன்...
*என்னவெல்லாம் சாப்பிட்டாய்! கேள்விக்கு
சாப்பிட்டேனா! சந்தேகம் வரும்...
*இடம் மாறி அணிந்த செருப்பின் கால் வலி அப்போதுதான் உரைக்கும்...
*நான்காவது முறை கேட்கும் போதுதான் உதடு
மருத்துவரிடம் பெயரையே உச்சரிக்கும்...
*ரத்த அழுத்தம் அதிகமாய் இருக்கிறது...
உணவு கட்டுப்பாடுகள் அவர் சொல்லும்போதும்
மனம் செல்பேசியிடமே! இருக்கும்...
*இரவு உறங்கும் முன் புதிதாய் சந்தேகம் முளைக்கும்...
காலையில் பல் துலக்கினேனா!
*இப்படிதான் என் ஒவ்வொறு நாளுமே கழிகிறது...
*நினைவுகளே எனக்கு நீயாகிப் போனதில் மறதியாகிவிட்டது...
No comments:
Post a Comment