தேடலும்...தேடல் நிமித்தமும்....
**நீ சுலபமாக கண்டுபிடிக்க
உன்னுள் ஒளிந்துகொள்கிறேன்...
நீயோ உன்னைவிட்டு மற்ற
இடங்களில் என்னை தேடுகிறாய்...
**எங்கேயாவது
தொலைந்து போ!
கோபமாய் விரட்டுகிறாய்...
ஒளிய இடமின்றி
மீண்டும் உன்னிடமே
தொலைந்து போகிறேன்...
**ஒருநாள் நிஜமாகவே
தொலைந்துபோக நினைக்கிறேன்!
ஆனால் நீ தேடுவாயோ!
பயமாய் இருக்கிறது,,,
**என்னைத் திரும்ப திரும்ப
தேடிக் கண்டுபிடித்து
மீண்டும் உன்னிடமே
தொலைந்து போகிறேன்!.
**நீ எப்போது தேடினாலும்
நான் உனக்கு கிடைக்கிறேன்...
அதனால்தான் அடிக்கடி
என்னை நீ தொலைக்கிறாய்...
**என்னை விட்டு விடு!...
கண்டுபிடிக்க வேண்டாம்!
நீ கோபித்துக்கொள்கிறாய்...
ஆனால் என்ன?
பாதுகாப்பான இடம் தேடி
மீண்டும் நீ என்னிடமே
தொலையத்தான் போகிறாய்!...
**என்றோ தொலைந்த
பொருளை இன்று
கண்டுபிடித்துவிட்டு
சந்தோஷப்படுகிறாய்...
உன்னுள் தொலைந்த என்னை
எப்போது கண்டுபிடிக்கப்போகிறாய்?!
**ஒருநாள் பணத்தைக்
காணவில்லையென
தேடிக்கொண்டிருந்தாய்!
எனக்குத் தோன்றியது...
என்றாவது ஒருநாள்
என்னையும் இப்படித்தான்
தேடப்போகிறாய்!...
**முன்பெல்லாம் ஒருவர்
மனதில் இன்னொருவர்
ஒளிந்துகொண்டு
நடித்துக்கொண்டே
தேடிக்கொண்டிருந்தோம்!...
இப்போது இருவருமே
எங்கோ தொலைந்துவிட்டோம்!
தேடிக்கொண்டிருக்கிறோம்!...
**தொலைவதும்...
தேடுவதும்தான் காதல்...
தேடல்தான் வாழ்க்கை...
நீ எங்கோ இருக்கிறாய்!!!...
நான் இங்கே இருக்கிறேன்!!!...
நம்மை யாரென்று...
தெடிக் கண்டுபிடித்து
சேர்த்து வைக்கும்...
காதல்!!!...
உன் பெண்மை தேடலின்
ஆண்மை யாரென்று
தெரியவில்லை!!!...
ஆனால்...
என் ஆண்மை
தேடலின்
முழுபெண்மை நீ!!!...
**தேடல் என்பது நம்பிக்கை...
நீ என் வாழ்க்கைத் தேடல்...
கிடைக்கும்வரை தேடுவேன்...
இல்லை என்றாலும்
என் தேடல் முடிந்துவிடும்!...
நீ என் வாழ்க்கைத் தேடல்...
கிடைக்கும்வரை தேடுவேன்...
இல்லை என்றாலும்
என் தேடல் முடிந்துவிடும்!...
No comments:
Post a Comment