மாதங்களில் அவள்...
**மார்கழி முதல்
-நாளில் தொடங்குகிறாய்
மாக்கோலம்...
எந்த தை நாளில்
காணப்போகிறோம்?...
நம் மணக்கோலம்!...
**நீ போடும் ஒவ்வொரு
கோலத்திலும்
ஒளிந்திருக்கிறது!...
நீ என்னிடம் சொல்லாத
எனக்கான காதல்!...
**\எத்தனை புள்ளிகள்
கொடுத்தாலும்
கோலத்தில்
சிறைப்படுத்துகிறாய்!...
என்னை எப்போது
உன்னுள்
சிறைப்படுத்தப்போகிறாய்!...
**கோலத்தை முடித்துவிட்டு
கூந்தலில் ஈரத்துண்டோடு
நீ தலை சாய்த்துப்பார்க்கையில்
எனக்கு குழப்பம் வரும்!...
எது அழகு கோலமென்று!...
**என் கோலத்தில்
உனக்கு
எந்தக்கோலம்
பிடிக்குமென்று
கேட்கிறாய்?..
எனக்குப் பிடித்த
ரங்கோலி நீயிருக்க
நான் வேறென்ன
சொல்வது?...
**ஒரு புள்ளியில் தொடங்கி
அதே புள்ளியில்
முடிகிறது கோலம்...
உன்னுள் தொடங்கி
உன்னோடு
முடிகிறது
என் காதல்!...
**நீ போடும் கோலம்
இன்றோ...நாளையோ...
அழிந்துவிடும்...
ஆனால் என்றுமே
அழியாமல் இருக்கிறது!...
என் நெஞ்சில்
உன் கோலம்...
**இப்போதும் நீ
இல்லாத உன்
தெருவில்
நிறைய கோலங்கள்...
எந்த கோலத்தையும்
பிடிக்கவில்லை...
**கோலமும்...வாழ்க்கையும்...
ஒன்றுதான்...
புள்ளிகளை
சரியாக இணைக்காவிட்டால்
அலங்கோலமாகிவிடுகிறது!...
**காதலும்...கோலமும்...
ஒன்றுதான்...
அழிக்க மட்டும்
மனம் வருவதேயில்லை....
No comments:
Post a Comment