Monday, 28 November 2011

nanbendaa...

                                                           நண்பன்...


             *என் மரியாதைக்குரியவன்...


             *என்னிடம் மரியாதையை எதிர்பார்க்காதவன்...


             *எனக்கு இரண்டாம் ரசிகன்...
                ஆனால் முதல் விமர்சகன்...




             *என்னிடமிருந்து என்னாலும்
                 பிரிக்க முடியாத என்னுடைய 
                  மிக முக்கியமான அசையும் சொத்து...


             *என்னிடம் மட்டுமல்ல...
                 என்னைப்பற்றியும் அதிகம் பேசுபவன்...


             *என் உணர்சிகளுக்கும் உண்மைக்கும் 
                 உறங்காது தோள் கொடுப்பவன்...


             *என் பலமானவன்...
                 என்னுள் பலவீனமானவன்...


             *என் காதலியைவிட நிறைகளையும் 
                  மனைவியைவிட குறைகளையும் அறிந்தவன்...


             *நண்பா! பழகிய காதலுக்காக  கவிதைகளும் கல்லறைகளும் பேசலாம்..
                  காதலுக்காக உயிரையும் இழக்கலாம் என்று...
      
              *ஆனால் பார்க்காத நண்பனுக்காக வடக்கிருந்து 
                     உயிர் விட்ட இலக்கியமே சொல்கிறது...


                * ஒரு உண்மையான நட்பிற்காக 
                         எந்த காதலையும் இழக்கலாம் என்று...


  

Monday, 7 November 2011

ithu kavithaialla


                                                இது க(வி)தையல்ல...

*எத்தனை நாள் மறைக்க முடியும்...
      உன்னையும் உன்னுள்
   ஒளிந்திருக்கும் என்னையும்...



 *இப்பொழுது வேண்டுமானால் நீ 
       என்னை மறந்துவிட்டதாய் 
           நடித்துகொண்டிருக்கலாம்...
            ஆனாலும் நீ என்னை 
                  நினைப்பதே இல்லையென
                     நிச்சயமாய் என் கண் பார்த்து
  உன்னால் சொல்ல முடியுமா?...


*எத்தனையோ நாட்கள் உன்
     வார்த்தைகளால் நான்
         கண்ணீரில் நனைந்து இருக்கிறேன்...
           ஆனாலும் இன்றுவரையில் நீ 
               ஏற்படுத்திய காயங்களே 
  எனக்கு மருந்துதான்..  




*என்னுடைய உணர்வுகளை நீ 
    எத்தனையோ முறை 
       உதாசீனப்படுத்தி இருக்கிறாய்...
  அதனால்தான் 
    என்னால் இன்று மற்றவர்களின் 
       உணர்வுகளை படிக்க முடிகிறது...
         என்னின் உணர்ச்சியையும் 
            உயிரோடு என்னால் 
  உறங்க வைக்க முடிகிறது...

*கடைசி வரையில் நீ 
     என்னை சரியாகவே புரிந்து கொள்ளவில்லை...
  அதனால்தான் என்னால் 
     இன்று எல்லோரையுமே 
  சரியாய் புரிந்து கொள்ள முடிகிறது...

*இன்றுவரையில் எனக்கு 
     உன் மீது கோபமே இல்லை...
  ஆனாலும் நான் உனக்கு கடமைப்பட்டிருக்கிறேன்...

*நேசிப்பது பலவீனம் 
       மற்றவர்களால் நேசிக்கபடுவதுதான்
          பலமென்று நீதான் எனக்கு 
  உணரவைத்தாய்...




*நீ என்மீது செலுத்திய 
     அந்த வெறுப்புகள்தான் 
        இன்று எல்லோருமே 
  என்னை நேசிக்க காரணம்...
  உன் வெறுப்புகள்தான் 
     என்னை மற்றவர்கள் எப்போதுமே      
        நேசிக்க வேண்டும் 
  என்று பாடம் கற்றுதந்தது...

*நீ வேண்டுமானால் 
     நினைத்துக்கொண்டிருக்கலாம்...
        நம்முள் யுத்தம் முடியும் ஒவ்வொரு 
           வேளையிலும் நானே விட்டுகொடுப்பதால் 
  தோற்றுப்போய்விட்டேனென்று...
  ஆனாலும் தோற்றது மட்டும்தான் நான்...
     ஒவ்வொரு முறையும் 
        நீதான் என்னால் 
  தோற்கடிக்கபட்டிருக்கிறாய்...




*நான் உன்னிடம் 
    இழந்ததென்னவோ என் 
       பிடிவாதத்தை மட்டும்தான்...
  ஆனால் நீ உன் பிடிவாதத்தால் 
  என்னை அல்லவா இழந்துவிட்டாய்...

*நான் உன்னோடு மட்டுமே 
    கனவுகளை 
      வளர்த்துக்கொண்டு உன்னை 
         நேசிக்கவில்லை...
  உன்னைப்பற்றியும் என்னுள் 
  கனவுகள் ஏராளம் உண்டு...

*உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால்
     உன்னிடம் ஜெயிக்க 
       என்றுமே ஆசைப்பட்டதில்லை...
  ஆனால் உன் வாழ்க்கையில்
     என்றாவது ஒருநாள் 
         என் அன்பை 
             இழந்து போனதற்காக 
  நிச்சயம் அழுவாய்...
  அன்று உன்னை நான் கண்டிப்பாய் ஜெயிப்பேன் ...         

  

Sunday, 6 November 2011

ematram

                                                      (ஏ)மாற்றம்...

*கால் நூற்றாண்டுக்கு முன்னால் 
  கலவரத்தில் ஓடிப்போன நான் 
   நேற்றுதான் ஊருக்கு திரும்பினேன்...

*ஊராட்சி நகராட்சியாய்
  இனிதாய் வரவேற்றது...

*ஒத்தையடி பாதையில் இன்று 
  ஓராயிரம் வாகனங்கள்...

*மண் குடிசை இடத்திலெல்லாம் 
  மாடமாளிகைகள்...

*நடந்து சென்ற இடதிற்கும்கூட இன்று 
  நகர பேருந்துகள்...

*அதிசயமாய் ஆங்காங்கே சில 
  வேட்டி சேலைகள்...

*கட்டிடங்களுக்கு போட்டியாய்
  நிறைய கட்சி கம்பங்கள்...

*கலையை வளர்க்கவும் 
  கண்காட்சிக்கூடங்கள்...

*புன்னகையாய் பூக்களின் பூங்கா...

*அரங்கமெல்லாம் ஆரவாரமாய்
   அரசியல் வசனங்கள்...

*இரவையும் பகலாய் மாற்ற
  தெரு விளக்குகள்...

*துவக்கப்பள்ளி வளர்ந்து 
  மகளிர் கல்லூரி...

*இளமையோடு வெள்ளம் 
  இல்லாமல் நடைபோடும் ஆறு...

*மனமெல்லாம் பூரிப்பு...
  மாறிப்போன ஊரைப் பார்த்து ...

*மறுநாள் மூலைச்சிலைக்கு 
  சிறிதாய் மூக்குடைந்து போனதால் 
  எரிக்கப்பட்டன ஏழெட்டு கடைகள் ...

*துப்பாக்கி குண்டுக்கு பலியாகிப்போயின...
  சில அப்பாவி  உயிர்கள்...

Saturday, 5 November 2011

kathalenbathu...

                                                      காதலென்பது...

                                   *என்னுள் விழுந்த மின்னல் நீ...
                                     என்றும் மழையை தந்ததில்லை...
                                              அந்த மழையில் ஒருநாளும்
                                               நான் நனைந்ததில்லை...

                                    *நீயொரு தென்றல்தான்..
                                     ஆனால் எந்நாளும் நீ 
                                     தாலாட்டாய் வீசியதில்லை...
                                               அத்தாலாட்டில் ஒரு நாளும்
                                               கண்மூடி நான் உறங்கியதில்லை...

                                     *நீயொரு மரபு மீறாத 
                                       புதுக்கவிதை...
                                             இந்த கவிதையின்
                                             பொருள்தான் இன்றுவரை 
                                             எனக்குப் புரியவில்லை...

                                    *உன் முகம் 
                                      அழகான ஓவியம்தான்...
                                            இந்த ஓவியம் காட்டும்
                                            உணர்ச்சியைதான்
                                           இன்றுவரையில் என்னால் 
                                           படிக்கவே முடியவில்லை...

                                   *நீயொரு வாசம் வீசும் 
                                     வாடாத மலர்...
                                          எனக்குதான் இதுவரையில் 
                                          வாசம் தந்ததேயில்லை...

                                   *உன் பேச்சு இனிமையான 
                                     சங்கீதம்தான்...
                                         என் இதயத்தின் ஓசையை 
                                        அது ஒருநாளும் 
                                        பிரதிபலித்ததில்லை...

                                  *உன் இதயத்துடிப்பின் 
                                    ஓசையில் என் எண்ண அலைகள் 
                                    எப்பொழுதுமே வெளிப்பட்டதேயில்லை...

                                  *உன் கண்கள் பேசிய 
                                   அந்த மௌன மொழியை
                                   கடைசிவரையிலும் 
                                   என்னால் கண்டுபிடிக்கவே 
                                   முடியவில்லை...
            
                                  *ஆயினும் 
                                     மன்னித்துவிடு என்னை...
                                    உன்னை வெறுக்கத் தெரியவில்லை...

                                  *இன்றுவரையில் 
                                    நாம் பழகிய நாட்களை 
                                    நான் மறக்கவும் பழகவில்லை...


nimmathi...

                                                                        நிம்மதி...

*இரவு ஊடலினால் உறங்காமல் கண் எரிச்சல்...

*காலையில் விழித்ததென்னவோ

   கடன் கொடுத்தவன் முகத்தில்...

*உதட்டோடு  உபசரிப்பு...

*உப்பில்லாத உப்புமா...

*பேருந்து பயணத்தில் வெடிகுண்டு பீதி...

*மறந்து போன பைலுக்கு மறக்க கூடாத வசவுகள்...

*மதிய நேரத்து மரத்தடி கிசுகிசுக்கள்...

*மாலை நேரத்துச் செலவுக்கு காலியாகிப்போன மணிபர்ஸ்...

*மனபாரம் நீங்க தெய்வம் முன் நிற்கும் போது
மனதின் மூலையில் மறுபடி மறுபடிகேள்வியாய் அரிக்கும்...
வாசலிலே அனாதையாய் விட்டிருக்கும் 
காவல் இல்லாத மிதியடி...

NANBAN...

நண்பன்... 1 *முகத்துக்கு முன்னால் திட்டியும்!!!... முதுகுக்குப் பின்னால் தட்டியும் மட்டுமே கொடுப்பான்!!! நண்பன்!!!... 2 ...