காதலென்பது...
*என்னுள் விழுந்த மின்னல் நீ...
என்றும் மழையை தந்ததில்லை...
அந்த மழையில் ஒருநாளும்
நான் நனைந்ததில்லை...
*நீயொரு தென்றல்தான்..
ஆனால் எந்நாளும் நீ
தாலாட்டாய் வீசியதில்லை...
அத்தாலாட்டில் ஒரு நாளும்
கண்மூடி நான் உறங்கியதில்லை...
*நீயொரு மரபு மீறாத
புதுக்கவிதை...
இந்த கவிதையின்
பொருள்தான் இன்றுவரை
எனக்குப் புரியவில்லை...
*உன் முகம்
அழகான ஓவியம்தான்...
இந்த ஓவியம் காட்டும்
உணர்ச்சியைதான்
இன்றுவரையில் என்னால்
படிக்கவே முடியவில்லை...
*நீயொரு வாசம் வீசும்
வாடாத மலர்...
எனக்குதான் இதுவரையில்
வாசம் தந்ததேயில்லை...
*உன் பேச்சு இனிமையான
சங்கீதம்தான்...
என் இதயத்தின் ஓசையை
அது ஒருநாளும்
பிரதிபலித்ததில்லை...
*உன் இதயத்துடிப்பின்
ஓசையில் என் எண்ண அலைகள்
எப்பொழுதுமே வெளிப்பட்டதேயில்லை...
*உன் கண்கள் பேசிய
அந்த மௌன மொழியை
கடைசிவரையிலும்
என்னால் கண்டுபிடிக்கவே
முடியவில்லை...
*ஆயினும்
மன்னித்துவிடு என்னை...
உன்னை வெறுக்கத் தெரியவில்லை...
*இன்றுவரையில்
நாம் பழகிய நாட்களை
நான் மறக்கவும் பழகவில்லை...
No comments:
Post a Comment