Sunday, 6 November 2011

ematram

                                                      (ஏ)மாற்றம்...

*கால் நூற்றாண்டுக்கு முன்னால் 
  கலவரத்தில் ஓடிப்போன நான் 
   நேற்றுதான் ஊருக்கு திரும்பினேன்...

*ஊராட்சி நகராட்சியாய்
  இனிதாய் வரவேற்றது...

*ஒத்தையடி பாதையில் இன்று 
  ஓராயிரம் வாகனங்கள்...

*மண் குடிசை இடத்திலெல்லாம் 
  மாடமாளிகைகள்...

*நடந்து சென்ற இடதிற்கும்கூட இன்று 
  நகர பேருந்துகள்...

*அதிசயமாய் ஆங்காங்கே சில 
  வேட்டி சேலைகள்...

*கட்டிடங்களுக்கு போட்டியாய்
  நிறைய கட்சி கம்பங்கள்...

*கலையை வளர்க்கவும் 
  கண்காட்சிக்கூடங்கள்...

*புன்னகையாய் பூக்களின் பூங்கா...

*அரங்கமெல்லாம் ஆரவாரமாய்
   அரசியல் வசனங்கள்...

*இரவையும் பகலாய் மாற்ற
  தெரு விளக்குகள்...

*துவக்கப்பள்ளி வளர்ந்து 
  மகளிர் கல்லூரி...

*இளமையோடு வெள்ளம் 
  இல்லாமல் நடைபோடும் ஆறு...

*மனமெல்லாம் பூரிப்பு...
  மாறிப்போன ஊரைப் பார்த்து ...

*மறுநாள் மூலைச்சிலைக்கு 
  சிறிதாய் மூக்குடைந்து போனதால் 
  எரிக்கப்பட்டன ஏழெட்டு கடைகள் ...

*துப்பாக்கி குண்டுக்கு பலியாகிப்போயின...
  சில அப்பாவி  உயிர்கள்...

No comments:

Post a Comment

NANBAN...

நண்பன்... 1 *முகத்துக்கு முன்னால் திட்டியும்!!!... முதுகுக்குப் பின்னால் தட்டியும் மட்டுமே கொடுப்பான்!!! நண்பன்!!!... 2 ...