22-06-1974
*நடிகையெனில் ஒரே ஒரு மெழுகுவர்த்தியையே
ஒவ்வொரு வருடமும் அணைத்து
வயதை வயதை மறைத்துக் கொண்டாடலாம்...
*தயாரிப்பாளரின் செலவிலேயே அனைவரையும்
குளிப்பாட்டலாம்... சந்தோஷப்படுத்தலாம்...
*நடிகனெனில் நற்பணிக்கு ரசிகர்களை
பயன்படுத்தலாம்...ரத்ததான முகாம்
நாடெங்கும் நடத்தலாம்...
*திரைப்படமொன்றை வெளியிடச்செய்து
பாலாபிஷேகம் செய்யலாம்...
அடுத்த வருடமே அரசியலுக்கு வருவேன்...
பன்ச் வசனம் பேசி அடுத்த முதல்வர் ஆகலாம்...
*அரசியல்வாதி அவர்களுக்காக
மண்சோறு... ஆயிரம் ஜோடி திருமணம் நடத்தலாம்...
அங்கப்பிரதட்சணம் செய்ய சொல்லலாம்...
*மக்களின் வரிப்பணத்திலேயே அரசுத் திட்டம்
தொடங்கலாம்...அன்புப் பரிசுகள்...
அன்பளிப்புகள் சேகரிக்கலாம்...
*மரத்தை மட்டும் நட்டுவிட்டு
மற்றவர்களை தண்ணீர்விடச் செய்யலாம்...
*தீ மிதிக்கச் சொல்லிவிட்டு இது
காட்டுமிராண்டித்தனம்...அறிக்கையும் விடலாம்...
*எதிர்கட்சிச் தலைவர் வறுமை ஒழிப்பு நாள்...
நலத்திட்டம் வழங்கலாம்...
வானம்பாடிகள் வந்தன...
காக்கைகள் ஓடிப்போய்விட்டன...
வசனம் படிக்கலாம்...
*திடீர் வளர்ப்பு மகன் புழல் சிறைக்கு
ஆன்மிகப்பயணம் செல்லலாம்...
* முன்னாள் தலைவர்கள்
தன்னுடைய இருப்பை சுவரொட்டிகளில் சிரித்து
மக்களிடம் காட்டலாம்...
*வியாபாரிகள் இந்த நாளையும்
தள்ளுபடி விளம்பரத்தில்
தந்திரமாய் பணம் சேர்க்கலாம்...
*பணக்காரர்களுக்கு இன்று மட்டும்
தர்ம சிந்தனை தோன்றலாம்....
அனாதை இல்லம்...அன்னதானம் அமர்களப்படுத்தலாம்...
*தூண்டுவிழும் பட்ஜெட்டுக்கு
குடும்பத்தலைவர் யோசிக்கலாம்...
*வசந்தமோ!வருத்தமோ!
வருடத்துக்கு ஒருமுறை தான்...
*இரவினில் இறந்து...பகலில் பிறந்து...
இறந்து பிறந்து இறக்கிறேன்...
*எனக்கு மட்டும் உயிரோடு இருக்கும்
ஒவ்வொரு நாளுமே என் பிறந்த நாள் தான்...
No comments:
Post a Comment