Tuesday, 28 June 2016

AVAL PEYAR...

அவள் பெயர்...

 

*என்னைச் சுற்றி எல்லாமே உன் நிகழ்வுகள் தான்...

*சாலையில் நிறைய பெயர்ப் பலகைகள் 
உன் வடிவங்களில் என் நினைவைத் திருப்பும்...

*எதிரே வரும் வாகனங்களில் நீ அவ்வப்போது 
வேகமாய் என்னைக் கடந்து போவாய்...
என் காலச்சக்கரம் பின்னோக்கிச் சுழலும்...

*தெய்வத்தின் முன் பிரார்த்தனை செய்து பின் 
கண் திறக்கையில் எதிரிலேயே உன் தரிசனம் தருவாய்...
என்னைக் கடவுளாய் நீ மதித்த நினைவுகளெல்லாம் 
என்னுள் நிஜமாய் மலரும்...

*செய்தித் தாள்களின் நிறைய விளம்பரங்களில் 
நீ தென்படுவாய்...
என் முன்னால் நீ சிரித்து  விளையாடியநிகழ்வுகளெல்லாம் 
கண்ணீராய்க் கரையும்...

*வானொலியின் அலைவரிசைகளில் நீ 
நிறையதடவைகள் என்னால் கேட்கப்பட்டிருக்கிறாய்...
என்னோடு நீ பேசிய அத்தனை 
வார்த்தைகளையும் என் மனம் 
மறு ஒலிபரப்பு செய்யும்...

*திரை அரங்கத்தில்...தொலைக்காட்சியில் ...
நிறையக் காட்சிகளில் உன் அடையாளங்கள்...
என் கண் முன்னால் நீ நடமாடிய நாட்களெல்லாம் 
என்னுள் காட்சியாய்  விரியும்...

*பேருந்து நிலையத்தில்... பொது இடங்களில்...
காத்திருக்கும் வேளைகளில் எத்தனையோ முறை நீதான் என் 
அதிர்ஷ்டமென்று முன்னால் நீட்டப்பட்டிருக்கிறாய்...
உன்னை மறுத்த நாட்களெல்லாம் என்னைத் தொடர்ந்து .வரும்...

*வாசிக்கும் புத்தகங்கள்...எழுதும் நோட்டுகள்...அழைக்கும் குரல்கள்...
விளம்பரப் பலகைகள்...நீ அடிக்கடி தென்படுகிறாய்...
உன்னை மறந்துபோக நினைத்தாலும் என்னையே 
பார்த்துக் கொண்டிருந்த உன் கண்கள் கண்ணீராகும்...

*திருமண நிகழ்சிகளில் மணமகளின் வடிவாக 
உன்னை யாராவது சொல்வார்கள்...
நீ என்னிடம் கேட்ட அத்தனை ஆசைகள்...கனவுகள்...
மறுபடி மறுபடி வந்து போகும்...

*உன்னைவிட்டு விலக...மறக்க...பிரிய...அவ்வப்போது 
எண்ணங்கள் வந்துபோகும்...
இயற்கையின் சதியா! கடவுளின் சாபமா!
என்னைச் சுற்றி நடக்கும் எல்லா 
நிகழ்வுகளும் உன்னைத்தான் நினைவுபடுத்துகின்றன....







No comments:

Post a Comment

NANBAN...

நண்பன்... 1 *முகத்துக்கு முன்னால் திட்டியும்!!!... முதுகுக்குப் பின்னால் தட்டியும் மட்டுமே கொடுப்பான்!!! நண்பன்!!!... 2 ...