Tuesday, 7 June 2016

PHENIX...

பீனிக்ஸ்...


*உன் நினைவுத் தீ என்னுள்
 எரிந்து கொண்டே இருக்கிறது.. 
அதில் நான் கொஞ்சம் கொஞ்சமாய்
 சிதைந்துக் கொண்டே இருக்கிறேன்... 

*தினம் நான் தலைக்கு 
நீர் ஊற்றும் போது கூட 
உன் நினைவுத் தீ
 கொழுந்துவிட்டு எரியும்...
அதில் என் உயிர் 
எரிந்து கொண்டே கரையும்...

*இரவுப் பொழுதுகள்
 எனக்கு நரகங்கள்...
ஒவ்வொரு நாளுமே
 இரவினில் நான் இறக்கிறேன்...
மறுநாள் மீண்டும்
 இறப்பதற்காகப் பிறக்கிறேன்...

*என் வாழ்க்கை 
அர்த்தமற்று போய்விட்டது...
இன்னும் என்னுள் உன் வலிகள் 
மட்டுமே மிச்சமிருக்கிறது...

*என் இதயம் எப்போதும் 
வலித்துக் கொண்டே இருக்கிறது...
அதில் உன் உயிர் விடுதலை தேடி 
துடித்துக் கொண்டே இருக்கிறது...

*என் நடிப்பைக் கூட
 உன்னால் சகித்துக் கொள்ள முடியும்...
என் காதல் தெரியாது உனக்கு!
அதன் வலி(மை)யை 
உன்னால் தாங்கிக் கொள்ளவே முடியாது...

*என்னைப் பொறுத்தவரை 
என் எதிர்காலம் என்பது 
நம்முடைய இறந்தகாலம் மட்டும்தான்...

*ஒரு உயிரின் விலை 
காதல்தான் என்பது அதன் 
உன்னதமும்...வலியும்...
உணர்ந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும்...

*காதலும் நிஜம்...மரணமும் நிஜம்...
காதலில் வரும் மரணமும் நிஜம் தான்...

*உன் நலமும் சந்தோஷமும் 
மட்டும்தான் என் வாழ்க்கை...
அதற்காக மட்டும்தான் தினமும் 
நான் பிரார்த்தனை செய்து கொண்டே இருக்கிறேன்...

*எனக்கு குடிப்பழக்கமில்லை...
நான் புகைப் பிடிப்பதுமில்லை.
ஆனாலும் என் ஆயுள் குறைந்து கொண்டே வருகிறது...

*என் திருமணமென்பது 
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படவில்லை...
ஆனால் என் மரணம் மட்டும் நம் 
காதலில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது...

*இறக்கும் வரம்...மறக்கும் பலம்...
இறைவா! ஒன்று மட்டும் தா!

*உன் நினைவுத் தீ என்னுள்
 எரிந்து கொண்டே இருக்கிறது.. 
அதில் நான் கொஞ்சம் கொஞ்சமாய்
 சிதைந்துக் கொண்டே இருக்கிறேன்...



 


No comments:

Post a Comment

NANBAN...

நண்பன்... 1 *முகத்துக்கு முன்னால் திட்டியும்!!!... முதுகுக்குப் பின்னால் தட்டியும் மட்டுமே கொடுப்பான்!!! நண்பன்!!!... 2 ...