**நான் நினைத்தபடி நீ நடக்கவில்லை...
**நான் விரும்பியபடி நீ உன்னைத் தரவில்லை..
**என் வார்த்தைகளை எல்லாம் நீ மதிக்கவே இல்லை...
**பேருந்து நிலையத்தில் திரிந்தேன்...
**ஊர் முழுவதும் அலைந்தேன்...
**எத்தனை முறை கணக்கே இல்லை...
**வெயிலில் கருகினேன்... மழையில் நனைந்தேன்...
**உன் எதிர்காலம் தேடி நிகழ்காலம் தொலைத்தேன்...
**எனக்கு உன்னை எதற்கு பிடித்தது தெரியுமா?
நீ படிக்க விரும்பினாய்... விரும்பி படித்தாய்...
அதற்காக என்னையே விலகச் சொன்னாய் ...
**இரண்டு வருடங்கள் உன்னை பிரிந்து இருந்தேன்...
வாழ்க்கை முழுவதும் என்னோடு இருப்பாய் ...நம்பினேன்...
**உன்னோடு மட்டும் இல்லை...
உன்னைப்பற்றியும் நிறைய கனவுகள் வைத்திருந்தேன்...
என்னால் நீ உச்சம் பெற ஆசைப்பட்டேன்...
**உன் நல்ல எதிர்காலத்திற்காக உன்னையும் இழக்கத் துணிந்தேன்...
**நான் கனவிலும் நினைக்கவில்லை...
நீ சாதாரணமாக செய்கிறாய்...
**இப்போதும் எனக்கு உன் மேல் கோபமில்லை...
எந்த நிலையிலும் உன்னை மன்னிக்க முடியும்...
**ஆனால் என் அன்பு...நம்பிக்கைக்கு... நீ செய்த...
மறக்க முடியவில்லை...
வலித்துக்கொண்டே இருக்கிறது...
எத்தனை வரிகள்...கவிதைகள்...எழுதினாலும்
இன்னும் வலி மிச்சமிருக்கிறது...
**இளமையில் புரியாதது...
உனக்கு இருபதில் புரியும்...
முப்பதில் ..உணர்வாய்..
நாற்பதிலும் கண்ணீர் வரும்...
**ஒரு பெண் இரண்டில் முழுமை பெறுவாள்...
ஒன்று தாய்மை அது வலி ... என்றாலும் அது இல்லாத வாழ்க்கை வெறுமை ....
இரண்டு வாழ்க்கை முழுவதும் ஒரு அன்பு..
ஆண்மை மட்டுமில்லை...
அது தாய்மை அன்பாய் இருக்கவேண்டும்...
**ஆவின் ஆட்டுப்பால் விலையுண்டு...
தாய்ப்பாலுக்கு தங்கம் கூட ஈடில்லை...
**என் வாழ்க்கையில் நான் முழுமையாய் நம்பிக்கை வைத்த யாரும்
என் நெஞ்சில்கூட குத்தியதில்லை...
கண்களை மூடும்போது எப்போதும் இதயம் வலிக்கிறது ...
உறக்கம் களைந்து எழுந்தால் கண்கள் எரிகிறது...
இரவு பொழுதுக்கு பகலே பரவாக இல்லை...
**என் ஆசை எல்லாம் இப்போது நல்ல உறக்கம் மட்டும் தான்...
**நான் என்ன சாபமிட்டாலும் பலிக்கும்...
அதனால்தான் வாழ்க வளமுடன்!! வாழ்த்துகிறேன்...
**என்றாவது ஒருநாள் உன்னைப் பார்க்கும் நாளில்வரும்
என் கண்ணீரை சுவைத்துப் பார்... தித்திக்கும்...
அதுதான் இந்த தாய்மையின் அன்பு.
**உன் கண்ணீருக்கு நீயே கூட காரணமாய் இருக்கலாம்...
ஆனால் அதை துடைத்துவிடும் முதல் கை என்னுடையதாய்
இருக்க மட்டுமே நான் ஆசைப்பட்டேன...
**நான் சொன்னால் நீ கேட்க மாட்டாய்...தெரியும் ...
இருந்தாலும் சொல்கிறேன்...
என்னால் நீ வாழ்ந்தாய் ...
இது மட்டும்தான் என் ஆசை...
நான் உன்னை இழந்தாலும் நீ இலட்சியத்தை அடைய வேண்டும்...
**நீ என் உரிமை...முழுமை...நீ எனக்கு மட்டும்...நம்பினேன்...
உண்மையாய் இருந்தேன்...
வலிக்கவில்லை...
காயப்படுத்தினாய்...உண்மையாய் இல்லை...
வலிக்கிறது...
**படிக்கவேண்டும்...விலகிவிடுங்கள்...சொன்னது
வலிக்கவில்லை...
திரும்ப திரும்ப வந்தேன்...பதிலே இல்லை...
வலிக்கிறது...
**இரண்டு வருடங்கள் உன்னை பிரிந்து இருந்தேன்....
வலிக்கவில்லை...
நான் நினைத்தபடி உன்னை செதுக்க முடியவில்லை...
நீ விரும்பிய வாழ்க்கையைத் தர முடியவில்லை...
வலிக்கிறது...
**உன்னோடு பேசவில்லை...பழகவில்லை...
வலிக்கவில்லை...
உயிரையே தருவேன்... சொன்ன நீ பாசத்தில் தடுமாறினாய்...
**என்னிடம் நிறைய கேள்விகள்...நீ பதிலே தரவில்லை...
வலிக்கவில்லை.....
உன் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாய் இருக்கிறது..
வலிக்கிறது ...
**நம் உடல்கள் சேரவில்லை...காமமில்லை..
.வலிக்கவில்லை...
விடுதலை தேடி உயிர் துடிக்கிறது...கண்கள் அழுகின்றது...
வலிக்கிறது...
**நீ எனக்கு எந்த முக்கியத்துவமும் தரவில்லை...
சொன்னபடி நடக்கவில்லை...
வலிக்கவில்லை...
நீ நடந்து வருவதைப் பார்க்கையில் மனசு
வலிக்கிறது ...
**நீ எனக்கு வலியை மட்டுமே தந்து இருக்கிறாய் ...
வலிக்கவில்லை...
என்னால் மட்டும்தான் உனக்கு
சந்தோஷத்தை தர முடியும்... தர முடியவில்லை...
வலிக்கிறது...
**உன்னை திரும்ப திரும்ப மன்னித்தேன்...
வலிக்கவில்லை...
உன்னை விட்டு பிரிந்து சென்றாலாவது உன்னை மறக்கலாம்...
நினைக்கிறேன்...
வலிக்கிறது.
**வலிக்கவில்லை...ஆனால் வலித்துக் கொண்டே இருக்கிறது...
**இறுதியாய் இரண்டு வரிகள்...
**என் வாழ்க்கையில் உன்னை தவிர அதிக வலியை
இனி யாரும் தரப் போவதில்லை...
**உன் வாழ்க்கையில் என்னிடம் பெற்ற
தாய்மையின் அன்பை இனி யாரிடமும் நீ உணரப் போவதுமில்லை...