**கல்லாய் இருந்தேன்...
**எறும்பாய் ஊர்ந்தாய்...
**அன்பில் கரைத்தாய்...
**அழவைத்தாய்...
**விலகினாலும் நெருங்கினாய்...
**பணக்காரி நீ? பயந்தேன்...
**உயிரையும் தரத் துணிந்தாய்...
**பாசம் மிரட்டியது...பயந்தாய்...
**காரணம் சொல்லாமல் மௌனம் காத்தாய்...
**உதடுகள் சேர்த்து பிரிய சொன்னாய்...
** படிக்க வேண்டும்...விட்டு விடுங்கள் என்றாய்...
**எல்லோருக்கும் நீ துரோகி... எனக்கு நீ தியாகம்...
வெகு தூரம் வந்தேன்...
**நான்கு வருடங்கள்...
**மன்னித்து விடுங்கள்!... நட்பாய் இருப்போம்...
**கண்ணீர் விட்டாய்...மறக்க முடியவில்லை...
ஆனால் மன்னித்துவிட்டேன்...
**என்றைக்கு சந்திப்பேன்... தெரியவில்லை...
அன்றைக்கும் அழுவேன்...
**தனி மரம் நான் தோப்பாகிவிட்டேன்..
.
என்னையும் தாண்டி வளர்ந்தாய்...
**இன்னமும் தனி மரமாய்...
**
**என் அன்பு தவறு தான்...
ஆனால் அன்பில் தவறில்லை...
**கடைசி வரை போராடினேன்...
தோற்றுப்போனதில் வருத்தமில்லை...
**கத்தியில்லை ... ரத்தமில்லை...காயமில்லை...வலிக்கிறது ...
**வாழ்கையில் உண்மை அன்பு ஒரு முறைதான் கிடைக்கும்...
இழந்தபின்தான் அதன் அருமை புரியும்..
இருவரும் இறக்கும்வரை அது சாகாமல் வாழும்...
**கருப்பு கண்ணாடி அணிகிறேன்...
**பார்க்கக் கூடாது ! என்றில்லை...
**கண்ணீர் தெரியக்கூடாது ...
No comments:
Post a Comment