*உன் உடல் மேல் ஆசை கொண்டு
மோக தீயில் நான் எரியவில்லை...
ஆனால் என்னையும் தாண்டியும் உன்னை
உயரம் கொண்டு செல்ல நினைக்கிறேன்...
*உன் கன்னத்தில் முத்தமிட்டு
கள்வெறி கொண்டு நான் திரியவில்லை...
ஆனால் நீ கால் கொண்டு
நடந்த வலியை நான் உணர்கிறேன்...
*உன் உதட்டைக் கடித்து
கழுத்தில் புதைந்து
மார்பின் மத்தியில்
மதி மயங்கி கிடக்கவில்லை...
உன் பலத்தை உனக்கு
உணர்த்த விரும்புகிறேன் ...
உன் கனவுகளுக்கு
உயிர் கொடுக்க ஆசைப்படுகிறேன் ...
*உன் நிறத்தை பார்த்து நான் நெருங்கி வரவில்லை...
*காதல் என்பது காமம் இல்லை... அனுபவம் இல்லை...
பொழுதுபோக்கு இல்லை...
*மிகச் சிலருக்கு தான் காதல் வாழ்க்கை...
*காதல் மிருகத்தை மனிதனாக்கும்...
மனிதனை .புனிதமாக்கும்..
*சில வருடங்களுக்கு பிறகு நீ .உணர்வாய்...
காமத்தை விட காதல் மேல்...
உண்மையான அன்பு அதற்கும் ..மேல.
*உன்னை விட்டு வெகு தொலைவில்
விலகி நான் அன்று இருப்பேன்...
உன்னை மிக உயரத்திலும் வைத்திருப்பேன்...
ஆனால் என்னையும் தாண்டியும் உன்னை
No comments:
Post a Comment