Wednesday, 25 May 2016

KATHALUM KADANTHU POGUM....

                                 **நான்  உன் மேல் வைத்தது நம்பிக்கை...


**நீ எனக்கு செய்ததோ துரோகம் மட்டும் தான்...

**பிரசவ வலிதான் ஒரு உயிரின்  அதிகபட்ச .வலி.
துரோகத்தின் வலி அதுக்கும் மேல...



**நான் வேண்டும் என்றால் உண்மயாய் இரு...
உண்மையை சொல் காத்திருக்கிறேன் என்றேன்...

**என்னிடமே பொய்யாய் நடிக்கிறாய்...
என் கண்ணைப் பார்த்து கடைசிவரையில் நீ பேசவே இல்லை...

**இந்த உலகுக்கே நீ பொய்யாய் இருந்திருக்கலாம் ...
எனக்கு இருந்திருக்க  கூடாது...  

**உன் வாழ்க்கையில்  இனிமேல் 
ஆயிரம் பொய்கள்  கிடைக்கும்...

**நீ இழந்ததோ திரும்ப பெற முடியாத உண்மை...


**உண்மையான அன்பு என்பது இரு மனதோடு சரி...
அது ரகசியம்...தனிமை மட்டும் தான் .தேடும்..
புரிந்துகொள்ளும் வரை காத்திருக்கும்...
எதையும்  மறைக்காது... மறக்காது...

  **என் வலியை உணராத நீயா 
அன்பை புரியப்  போகிறாய்?...

**உன் அலட்சியம் பிடிவாதத்தால் உண்மையை... தாய்மையை...   இழந்துவிட்டாய்...

**என் அன்பு அம்மா அப்பாவைபோல்...
சுயநலமில்லாதது..எதிர்பார்ப்பு  இல்லாதது ...

**எனக்கு உன்  மேல் இனி எந்த உரிமையும் இல்லை...
இனி நீ எந்த எல்லைக்கும் போகலாம்...
எப்படியும் வாழலாம்...

**நெருப்பை பட்டாவது புரிந்து கொள்...

**எனை பழி வாங்க நினைத்து 
யாரும் உன்னை பயன்படுத்த அனுமதிக்காதே....

**இனியாவது புத்திசாலியாய் இரு...
உன் குறிக்கோளை மட்டும் தவமாய் நேசி...



**படிப்பு மட்டும்தான் மிகச் சிறந்த பாதுகாப்பு...
அது தெரியும் போது அதன் மதிப்பு உனக்குத்  தெரியும்...

**எனக்கு   பொய் பேசத்  தெரியாது...
நான் வாழ்வதே உங்களுக்காகத் தான்...
இரண்டில்  எது உண்மை?...

**அன்பில் இரு வகை...
நீ வார்த்தையா ? வாழ்க்கையா ?

**வாழ்வில் ஏதோ ஒரு உறவுக்காவது உண்மையாய் இரு...

**குறைந்த பட்சம் உனக்காவது உண்மையாய் இரு
.
**என்றாவது ஒரு நாள்  என் உண்மை .வலிக்கும்...
துரோகத்தின் வலியைவிடவும் அது  அதிகமாய் இருக்கும்...

**அன்று உன் ஈகோ  உடைந்து உண்மைக்காக ஏங்குவாய்...
அன்றைக்கும் உனக்கு நான்  தாயுமானவனாக இருப்பேன்...

No comments:

Post a Comment

NANBAN...

நண்பன்... 1 *முகத்துக்கு முன்னால் திட்டியும்!!!... முதுகுக்குப் பின்னால் தட்டியும் மட்டுமே கொடுப்பான்!!! நண்பன்!!!... 2 ...