Monday, 10 October 2011

vaimai enapaduvathu yathenil...

                                    வாய்மை எனப்படுவது யாதெனில்...

*சில்லறை கொடுக்க மட்டுமே 
        மறந்து போகும் நடத்துனர்...

*காலையில் மறந்து போக 
       இரவில் கணவன் செய்யும் சத்தியம்...

*மனைவி மறைக்கும் 
      கருப்பு பண கணக்குகள்...

*கல்லூரி கட்டணம் உயர்த்தி 
      திரைப்படம் பார்க்கும் மகன்...

*அலுவலக விடுப்பில் அடிக்கடி 
      இறந்து போகும் இல்லாத பாட்டி...

*தர்மம் கேட்கும் போது 
      மட்டுமே தட்டுப்படாத சில்லறை...

*கடன் கேட்கும் போது 
      மட்டுமே காலியாகத் தோன்றும் மணிபர்ஸ்...

*அரசியல்வாதியின் 
      தேர்தல் நேர வாக்குறுதிகள்...

*தேர்தல் நேர 
      திடீர் கூட்டணிகள்...

*பேரணிக்காக காட்டப்படும்
       மக்களின் எண்ணிக்கை...

*மாநாட்டில் வசூலிக்கப்படும் 
      கட்சி நிதி கணக்கு...

*பதிவானதாக காட்டப்படும் 
      இறந்து போனவரின் வாக்கு...

*திருமணத்திற்கு முன் காதலியைப் 
      பற்றிய காதலனின் வர்ணனைகள்...

*ஜவுளிக்கடையில் வழங்கப்படும் 
      தள்ளுபடி விற்பனை...

*சிகரெட் பெட்டியின்
      எச்சரிக்கை வாசகம்...

*நிதி நிறுவனங்களின் 
      கவர்ச்சி வட்டி விகிதம்...

*குடும்ப அட்டையில் உள்ள 
       உறுப்பினர்களின் எண்ணிக்கை...

*ரேஷன் கடைகளில் 
       வழங்கப்படும் பொருளின் நிறை...

*தொலைக்காட்சி விளம்பரங்களின் 
       பளீர் வெண்மை...

*வருமான அதிகாரிகள் 
       வரும்போது மட்டுமே வரும் திடீர் நெஞ்சு வலி...

*ஆட்டோ மீட்டர் காட்டும்
       சரியான கட்டணம்...

*தெரிந்தவரைப் பார்த்தவுடன் 
       பேருந்தில் வரும் திடீர் உறக்கம்...

*எப்பொழுதுமே ஏறாமல் 
       இருக்கும் நடிகையின் வயது...






Sunday, 2 October 2011

mangaiyarai pirapatharke



                                              மங்கையராய்ப்  பிறப்பதற்கே...


  கரு முதல் கல்லறை வரை...
*கருவாய் இருக்கும்போதே காட்டிக்கொடுக்கப்பட்டால்
       நீ கலைக்கப்படலாம்...

*தவறிப்  பிறந்தாலும் தாய்ப்பாலாய் உனக்கு 
       கள்ளிப்பால் கொடுக்கப்படலாம்...

*உயிரை பறிக்க உணவாய் உனக்கு
        நெல்மணி தரப்படலாம்...


*உறவை முடித்து வைக்க சிலநேரம் நீ
         உயிரோடும் புதைக்கப்படலாம்...


*அரசுத்திட்டம் போலவே அரசுத்தொட்டிலிலும்
         அவசரமாய் நீ அடக்கம் செய்யப்படலாம்...


*நீ பிறந்த நேரத்தில் சில நோயாளிப்பெருசுகள்
         இறந்தாலும் இராசி இல்லாதவள் 
          அதிர்ஷ்டம் கெட்டவள் என  அடுக்கடுக்காய் 
         உனக்கு பெயர்கள் சூட்டப்படலாம்...

*உலகமென்பது உனக்கு உன் வீட்டு சமயலறையாய்
         மட்டுமே மாற்றப்படலாம்...

*பள்ளிப்படிப்பும் கூட உன் வீட்டுப்படியோடு 
        முடிக்கப்படலாம்...

*அடிமையாய் நடக்கப்பழகுமாறு உனக்கு 
        அடிப்படைக்கல்வி கற்றுத்தரப்படலாம்...


*அடங்கிநடப்பதே அன்பென்று உனக்கு
        அறிவுறுத்தப்படலாம்...

*நீ பேசுவதும் சிரிப்பதும் கூட 
        குற்றமென்று உனக்கு சட்டமாக்கப்படலாம்...

*மாப்பிள்ளை பார்க்கும் நாடகமும் அவசரமாய் 
        உனக்கு அரங்கேற்றம் செய்யப்படலாம்...

*உன் மௌனத்தைக்கூட சம்மதமென நினைத்து 
       கட்டாய கணவன் உனக்கு கல்யாணத்தில் வரலாம்...

*கோவலக் கணவனுக்கும் கண்ணகியாய் நடக்க நீ 
       தண்டிக்கப்படலாம்...

*உன் உரிமைக்காக நீ எதிர்க்கும் போது
       மண்ணெண்ணெய் சிலநேரம் உன்னையும் எரிக்கலாம்...


*சட்டங்கள் உன் விஷயத்தில் மட்டும் ஏனோ 
       சத்தியம் மீறலாம்...

*உன் கொலை என்பது பல நேரம் 
       தற்கொலையாய் நிறம் மாறலாம்...

*காவல் நிலையங்களில்கூட 
       உன் கற்பு களவாடப்படலாம்...

*இழந்த கற்புக்கும் விலையாய் நீ விலைமாதாய்
       விளம்பரம் செய்யப்படலாம்...

*ஆகையால் இனிமேலாவது யாரும் 
      மங்கையராய்ப் பிறப்பதற்காக மறந்தேனும் 
       மாதவம் செய்ய வேண்டாம்... 

amuthavisham


 

   அமுதவிஷம்...
1
*நீ ரொம்பவும் அதிர்ஷ்டசாலியாம்...
       நிறையபேர் பொறாமைபடுகிறார்கள் ...
. ஆனால் எனக்கு மட்டும்தான் தெரியும்...
       நான் எவ்வளவு துரதிர்ஷடசாலி என்று ...
2
*எனக்கு உன் காதலும் தெரியும்...
       உன் வலியும் புரியும்...
   உனக்கு என் காதலும் புரியாது...
        என் வலியும் புரியாது...
3
*உனக்கும் ஆயிரம் பேர் கிடைக்கலாம்...
       எனக்கும் ஆயிரம் பேர் கிடைக்கலாம்...
  ஆனால்   எனக்கு நீயும் உனக்கு நானும் 
       கிடைத்தால் அதுதான் நம் வாழ்க்கை...
4
*நம் கடைசி சந்திப்பில் உன் கண்களும் 
        அந்த மௌனமும் காட்டிகொடுத்துவிட்டது...
  உனக்கு மறுக்க தெரியவில்லை...
         மறைக்கவும் தெரியவில்லை...
  எனக்கு வெறுக்க தெரியவில்லை...
          விலக புரியவில்லை...

5
*நீ என் உணர்வுகளை நேசித்தாய்...
        நான் உன் உணர்வுகளை மதித்தேன்...
  உறவுகள் நம்மை எதிர்க்கிறார்கள்...
         என்ன செய்வது?
  காதலுக்கு மட்டும் இன்னும்
          மரியாதை கிடைக்கவே இல்லை...


6
*உன்  காதலும் உண்மைதான்...
   என் காதலும் உண்மைதான்...
   இங்கே நாம் மட்டும்தான் பொய்...
7
*நீ உன் பாசத்திற்காக காதலை
         தியாகம் செய்துவிட்டாய்...
  நான் என் காதலுக்காக காதலியை 
           மட்டும் தியாகம் செய்துவிட்டேன்...
  ஆனால் ஒரு உண்மையான அன்பை 
          எந்த விலைக்கும் வாங்க முடியாது...

8
*காலம் என்பதென்னவோ நல்ல மருந்துதான்...
   ஆனால் காயங்கள் போதுமடி எனக்கு...
9
*என்னுள் எப்போதும் வலித்துக்கொண்டே இருப்பதால் 
       நான் காதலையே வெறுக்கிறேன்...
  ஆனாலும் ஏனென்று தெரியவில்லை?...
      உன்னை எப்போதுமே காதலித்துக்கொண்டே இருக்கிறேன்...

 10

*நம் இருவருக்குமே சந்தோஷமாக இருக்கவும் தெரியவில்லை...
       சந்தோஷமாக நடிக்கவும் தெரியவில்லை...
  ஆனாலும் நாம் ஒருவரின் சந்தோஷத்திற்காக இன்னொருவர்
        பிரார்த்தனை செய்துகொண்டே இருக்கிறோம்...

11
*நம் இருவரின் பிரிவில் இழப்பென்பது இருவருக்குமேதான்...
  ஏனென்றால் என்னால் மட்டும்தான் உன்னை
       அதிகம் உணர்ந்துகொள்ளவும் முடியும்...
  உன் அருகாமை மட்டும்தான் எனக்கு எப்போதும் சந்தோஷம் தரும்...


12

*நம் காதலை யாராலுமே அழித்துவிட முடியாது...
  ஏனென்றால் என் காதலின் முதல் நினைவுச்சின்னமாய்
         நீ எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்...
   உன் காதலின் கடைசி நினைவுச்சின்னமாய்
         நான் இங்கே  ஜடமாகிவிட்டேன்...

13
*நீ சாகக்கூடாது! என உன்னிடம் சத்தியம் வாங்கி இருக்கிறேன்..
   அதனால் எனக்காகத்தான் நீ உயிரோடிருகிரோய். ,
  உனக்காகவும்  அல்லவா நான் இறந்து கொண்டேயிருக்கிறேன். 
       



Saturday, 1 October 2011

nanum neeyum

 




                                   *என்னால் நீ
                                         பகிரங்கமாய் அழுதிருக்கிறாய்...
                                      எனக்காகவும் நீ
                                           ரகசியமாய் அழுதிருக்கிறாய்... 


       * ஒன்றை இழந்தால்தான் 
          இன்னொன்றைப் பெறமுடியும்     
          என்பது உண்மைதான்...
                   அதற்காக என்னால் 
                    உன்னையும் உன் அன்பையும் 
                    இழக்க முடியாது...


                                    *எனக்கென்று இருக்கும்
                                           கனவுகளையும் தாண்டியும்
                                            நீ என்னை நேசித்துக் கொண்டிருக்கிறாய்...
                                       எனவே இப்போதெல்லாம் எனக்கு
                                            கனவுகளே நீதான்...


     *உன்னைப் போன்றதொரு
                பெண்ணை யாராலுமே
                வெறுக்க முடியாது...
       உன்னை நான்
                வெறுப்பதாக நீ
                 நினைத்துகொண்டிருந்தால்
        எனக்குத்தான் நேசிக்கத்தெரியவில்லை...


                                     *காதலென்பது குற்றமா?
                                              எனக்கு தெரியவில்லை...
                                        ஆனாலும் உன் காதலில் 
                                              இன்றுவரையிலும் என்னால்
                                       குற்றம் சொல்லவே முடியவில்லை...

        *என்னால் நீ அழுதால்
                நான் உன் பலவீனம்...
           எனக்காகவும் நீ அழுதால்
                நீ என் பலம்...

                                        *இந்த உலகமே என்னை
                                                  நேசித்துகொண்டிருக்கிறபோதும்
                                           என் உலகமாய் நான் உன்னை மட்டும்தான் 
                                                  நேசித்துகொண்டே இருக்கிறேன்...

         *உன்னை நினைவுபடுத்தும் 
                  எல்லா பொருட்களையும் 
                   அழித்துவிட எனக்கும் ஆசைதான்...
             ஆனால் என்ன செய்வது?
                   நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்...
                                            
                                            *இதுவரையில் தெய்வத்திடம் 
                                                    எனக்கென்று நான் 
                                                     எதையுமே கேட்டதில்லை...
                                               என்னை சுயநலமாக்கியது 
                                                     நீ மட்டும்தான்...

        *நீ மட்டும்தான் எனக்கு 
               மரணத்தை நேசிக்கவும் 
           கற்றுதந்திருக்கிறாய்...

                                                 *நான் நன்றி சொல்ல வேண்டிய 
                                                         எத்தனையோ சம்பவங்களுக்கு எல்லாம்
                                                           நீதான் மன்னிப்பு கேட்டிருக்கிறாய்...
                                                   அதற்காக என்னை மறந்துவிடுங்கள்
                                                          என்று மட்டும் மன்னிப்பு கேட்டுவிடாதே...


                                   *உன்னை முதன் முதலாய்
                                     சந்தித்த அந்த நாளுக்குமுன் 
                                     பூர்வஜென்மம் 
                                     ஏழேழுஜென்மம் 
                                      நம்பிக்கையெல்லாம்   இல்லாமல்தான் இருந்தேன்...


         *ட்ரில்லியன்
           பில்லியன்
            கோடி
            மில்லியன்
           லட்சம்
            எல்லாவற்றையும்விட
             மதிப்பானது...
           உன்னை உண்மையாய் நேசிக்கும் என்  மனது...


        *என் இதயம் ஒரு மாயக்கண்ணாடி என்றேன்...
           நம்பவில்லை நீ!
           உன்னை அதில் பார்! தெரிவாய்! என்றேன்...
           அலட்சியபடுத்தி உடைத்துப் பார்த்தாய்...
           இப்போதும் உடைந்த ஒவ்வொரு துண்டிலும் நீதான்...

                                             *ஒரு கேள்வி ?
                                                பதிலுக்காய்
                                                         காத்திருந்தேன்...
                                                               த்திருந்தேன்...
                                                                   திருந்தேன்...
                                                                       ருந்தேன்...
                                                                            ந்தேன்...
                                                                               தேன்...
                                                                                     ன்...
                                               உடலை மிஞ்சியது மனதின் வலி...
                                                அதிர்டமில்லையடி உனக்கு... 




NANBAN...

நண்பன்... 1 *முகத்துக்கு முன்னால் திட்டியும்!!!... முதுகுக்குப் பின்னால் தட்டியும் மட்டுமே கொடுப்பான்!!! நண்பன்!!!... 2 ...