Monday 25 April 2016

KATHALITHUPAR...

**காதலித்துப் பார்...
**காதலித்தால் BAR...
**காதலித்துப் பார்...
**காதலித்தால்  TASMAC BAR...


**கையெழுத்து அழகாகும்...
தலைஎழுத்து தடுமாறும்...
 காதலித்துப் பார்...
**உன் முகத்தை கண்ணாடி காட்டாது...
மூன்று முறை பல் தேய்ப்பாய்...
ஆறு முறை தலை கோதுவாய்...
 
ஒரு முறை கூட குளிக்கமாட்டாய்...
 காதலித்துப் பார்...
**கடிதம் எழுதி நோகடிப்பாய்...
கவிதை சொல்லி சாகடிப்பாய்...
உன்னிடம் நீயே பேசிக் கொள்வாய்...
உன்னைவிட்டு எல்லோரும் விலகுவார்கள்...
 காதலித்துப் பார்...
**கண் திறந்து கனவு காண்பாய்...
கண்ணாடிமுன் தவம் செய்வாய்...
காத்திருப்பது சுகம் என்பாய்...
 காதலித்துப் பார்...

**புரண்டு புரண்டு படுப்பாய்...
நண்பனை பிராண்டுவாய்... 
பகலிலும் தூங்கவிடமாட்டாய்...
 காதலித்துப் பார்...
**காக்கை குரலில் அவள் கரைவாள்...
குயிலுக்கு அவள்தான் குருநாதர் என்பாய்...
 காதலித்துப் பார்...
 
**அவள் தான் உலக அழகி என்பாய்...
அவள் தங்கை அவளைவிட அழகு என்பாய்...
அவள் தோழியைப் பார்த்துவிட்டால் இருவரையும் 
தங்கை என்பாய்...
அவள் அண்ணன்...அப்பன்...எல்லோரையுமே வில்லன் என்பாய்...
 காதலித்துப் பார்...

**அக்னி வெயிலில் அருகருகே அரை நாள் பேச வேண்டுமா!
**ஆளில்லாமல் பேருந்து நிலையத்தில் 
அனாதையாய் நிற்க வேண்டுமா!
**ஐஸ் வாட்டர் மட்டுமே குடித்து உன் அத்தனை 
சேமிப்பையும் தொலைக்க வேண்டுமா!
**நட்பா! காதலா! புரியாமல் 
தினமும் சரக்கு வேண்டுமா!
**MISSED CALL-ல்  உன் மொத்த வாழ்க்கை முடிய வேண்டுமா!
**மூன்றாண்டு படிப்பை ஆறாண்டில் முடிக்க வேண்டுமா!
 காதலித்துப் பார்...

**சின்ன சின்ன பரிசுகளில் நீ சிதைந்து போவாயே! அதற்காகவேனும்...
**அப்புறம்...அப்புறம்...என்று அரை நாள் பேசுவாயே! அதற்காகவேனும்...
**PURCHASE செய்து செய்து உன் PURSE  கரைந்து போகுமே! அதற்காகவேனும்...
**RECHARGE செய்தே உன் BALANCE  முடிந்து போகுமே! அதற்காகவேனும்...
  காதலித்துப் பார்...

**அப்பா..அம்மா...சண்டை போட்டாலும்...
**உறவுகள் உனக்கு என்ன உரைத்தாலும்...
**நீ நேசித்த அவளோடு தெருவில் நின்றாலும்...
**எதிர்காலம் புரிந்து எல்லாவற்றையுமே இழந்து நின்றாலும்...
 காதலித்துப் பார்...
**சொர்க்கம் சாத்தியமில்லை...
நரகம் மட்டுமே சத்தியம்...
**காதலித்துப் பார்...

**காதலித்தால் BAR...
**காதலித்துப் பார்...
**காதலித்தால்  TASMAC BAR...
**காதலித்துப் பார்... 
**கண்டிப்பாய் உனக்கு ,மூன்றாம் நாள் பால்...


NANBAN...

நண்பன்... 1 *முகத்துக்கு முன்னால் திட்டியும்!!!... முதுகுக்குப் பின்னால் தட்டியும் மட்டுமே கொடுப்பான்!!! நண்பன்!!!... 2 ...